இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ரபீஉல் அவ்வல் மாதம் முதல் 12 நாட்களில் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்படுவது வழமை.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தரப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியில் இவ்வாண்டு ரபீஉல் அவ்வல் முதல் 12 நாட்களில், தினமும் மஃரிப் தொழுகைக்குப் பின், பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமையில் மவ்லித் மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ,
ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாக்கவீ,
மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ,
‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ,
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ,
மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ,
குருவித்துறைப் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ,
மவ்லவீ ஹாஃபிழ் எச்.பி.என்.முஹம்மத் ஷாஹ் ஜாத் புகாரீ,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ
ஆகியோர் முறையே ரபீஉல் அவ்வல் 12 நாட்களிலும் உரையாற்றினர். நிறைவு நாளன்று, நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் அனைவருக்கும் தபர்ருக் - நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நஹ்வீ M.M.முத்துவாப்பா |