ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 04.30 மணிக்கு, காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
‘மானுட வசந்தம்’ நிகழ்ச்சி நடத்துடனும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, “அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுமாறும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான - ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் காயல்பட்டினம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. |