இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், ஜனவரி 26 அன்று (நேற்று) நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில், குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கினார். ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் சண்முகவேல், முஸ்லிம் லீக் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர நிர்வாகிகளான ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி ஆர்.பி.ஷம்சுத்தீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், பாக்கியஷீலா, கே.ஜமால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கே.வி.ஏ.டி. அறக்கட்டளை செய்தித் தொடர்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கிராஅத் - தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினரும், கே.வி.ஏ.டி. அறக்கட்டளை நிர்வாகிகளுள் ஒருவருமான கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தியதோடு, சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், மேடையில் முன்னிலை வகித்த நகரப் பிரமுகர்கள், சிறப்பழைப்பாளர்கள் அனைவருக்கும், கே.வி.ஏ.டி.அறக்கட்டளை சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
நன்றியுரைக்குப் பின், நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. விழாவில், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை, கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை நிர்வாகி ஹாஜி கே.வி.ஏ.டி.கபீர் தலைமையில், அதன் மேலாளர் ஆஷிக், ஆசிரியர் மு.அப்துல் ரசாக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். |