தூத்துக்குடி மாவட்டத்தில் 13 தாசில்தார்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடிக்கு பெண் தாசில்தார் நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் தாசில்தாராக இருந்த சங்கரநாராயணன் கோவில்பட்டி ஆர்டிஓ நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்பட்டோர் பிரிவு (கல்வி உதவித்தொகை) தாசில்தாராக இருந்து வந்த நல்லசிவன், திருச்செந்தூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தாசில்தாராக இருந்து வந்த கலியுகவரதன் அரசு கேபிள் டிவி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தாசில்தாராக ஆழ்வாரம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பிரிவில் தாசில்தாராக இருந்து வந்தார்.
முத்திரைப் பிரிவு தாசில்தாரா இருந்த நெல்லை நாயகம் ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் மாடசாமி, தேர்தல் பிரிவு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி தேர்தல் பிரிவு தாசில்தார் ராமகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடாரம் தாசில்தார் ராமசுப்பரமணியன் சிப்காட் நிலம் கையகப்படுத்தும் தாசில்தாராக நியமிக்கப்ட்டுள்ளார். ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை தாசில்தாராக இருந்த ரமேஷ் கோவில்பட்டி தாசில்தாராக நியமிக்கப்ட்டுள்ளார். கோவில்பட்டி தாசில்தார் விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்ட்டுள்ளார்.
விளாத்திகுளம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பிரிவு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கலால்துறை அலுவலர் சுப்பையா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராக இருந்த சங்கர லிங்கம் கோட்ட கலால் அலுவலக தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1. ஏப்பம் எங்க இடமாற்றம் செய்வாங்களோ? posted byNIZAR (KAYALPATNAM)[29 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25266
ஆட்சியாளர்கள் நம்மலை எப்பம் எங்கே இடமாற்றம் செய்வாங்களோ? குழந்தை ஸ்கூலில் படிக்கிறான், ஊரு பழகிபோச்சி, ஐயோ எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி புதிய இடத்துக்கு போறது என அச்சத்திலேயே அரசு அதிகாரிகள் வாழ்கையை ஓட்டுகிறார்கள்.
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது
வழமைதான்,ஆனால் அம்மா ஆட்சியில் சற்று அதிகமாகவே இருக்கும்.அம்மா அவர்களிடம் ஒரு சிறந்த பண்பு என்னவெனில் இடமாற்றம் செய்வதெல்லாம் உயர்பதவியில் இருப்பவர்களைதான் தவிர சாதாரண அலுவலர்களை பெரும்பாலும் இடமாற்றம் செய்வதில்லை என்பது குறிப்பிட தக்கது.
எப்படியோ அம்மா ஆட்சினா ஒரு த்ரில் தாங்க, அமைச்சர்களே
காலையில் விழிக்கும்பொழுது பதவி இருக்கா?வேறு இலாகா மாற்றி விட்டாங்களா?நம்ம வீட்டில் பந்தோபஸ்து இருக்கா?என பதறும் இந்த ஆட்சியில் தாசில்தார் மாற்றம் எல்லாம் மேட்டரே இல்லங்க?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross