காயல்பட்டினம் அலியார் தெருவில் இயங்கி வரும் கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவில், இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, இறைநேசர் முஹ்யித்தீன் ஆண்டகை நினைவு நாள் விழா, கவ்து முஹ்யித்தீன் மத்ரஸாவின் 21ஆம் ஆண்டு துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா, வரும் பிப்ரவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) கவ்திய்யா திடலில் நடைபெறவுள்ளது.
மத்ரஸா மாணவ-மாணவியரின் சன்மார்க்க பல்சுவை நிகழ்ச்சிகள், மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள், பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கி இவ்விழா நடைபெறுகிறது.
முப்பெரும் விழா ஏற்பாடுகளை, மத்ரஸா நிர்வாகிகள் செய்து வருகின்றனர். |