Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:52:28 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10061
#KOTW10061
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 29, 2013
ஒருங்கிணைந்த மருத்துவ உதவி திட்டம் (மைக்ரோகாயல்) இரண்டாம் ஆண்டில் ... புதுப்பொலிவுடன்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3380 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்பாராத மருத்துவ செலவினங்களினால் அல்லல்படும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை எளிய (நமதூர்) மக்களுக்கு மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்குவதற்காக கடந்த வருடம் துவக்கப்பட்ட “மைக்ரோ காயல்” அமைப்பு, இரண்டாம் வருடத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது. இது குறித்து அதன் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சாளை. முஹம்மத் முஹிய்யதீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற காரணியை மூலதரமாக வைத்து 2012 ம் ஆண்டு ஜனவரி திங்கள் 29 ம் திகதி தொடங்கப்பட்ட மைக்ரோகாயல் அமைப்பு, இன்று ஒரு வருடத்தை உங்கள் அனைவரின் ஆதரவுடன் பூர்த்தி செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்!

அதே உற்சாகத்துடனும் நல்ல பல உதவி திட்டங்களுடனும், மேம்படுத்தப்பட்ட இணையதள வடிவமைப்புடன் இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைக்கின்ற இவ்வேளையில், நம் ஒராண்டு செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கும் நமதூர் மக்களுக்கும் விவரிக்க கடமை பட்டுள்ளோம்.

• மைக்ரோகாயல் மூலம் உதவி பெற்றோர் எண்ணிக்கை : 20

• மைக்ரோகாயலில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை : 181

• இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிப்பவர்கள், மைக்ரோ காயலில் உறுப்பினர்களாகவும் மருத்துவ உதவிக்கு பங்களிப்பவர்களாகவும் உள்ளார்கள்

• மைக்ரோகாயல் மூலம் செய்த மொத்த உதவி தொகை: ரூபாய் 5,05,120

• எமர்ஜென்சி மற்றும் குழந்தை நல நிதிகள் (fund) மூலம் திரட்ட பட்ட தொகை: ரூபாய் 99,900 (அதில் இதுவரை தேவை உள்ளவர்களுக்கு உபயோகித்தது: 35,250)

• மைக்ரோகாயலில் ஆர்வமிக்க (Active) தனிநபர் செலுத்திய சராசரி மாத சந்தா: ரூபாய் 600

• பாலகர் முதல் முதியவர் வரை இத்திட்டத்தின் மூலம் பலரும் பயனடைந்துள்ளனர்

• எலும்பு முறிவு, கான்செர் நோய், கிட்னி பாதிப்பு என பலதரப்பட்ட நோய்களுக்கான உதவிகள் வழங்கப்படுள்ளன

• ஹாஜி தர்வேஸ் முஹம்மது (Liaison Officer) அவர்களால், உதவி கோருபவர்களின் நோய் மற்றும் ஏழ்மை நிலை உறுதி செய்யப்பட்ட பின்னரே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு வருகின்றன

• வழங்கப்படும் உதவிகள் நோயாளியின் சார்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கோ பார்மஷிக்கோ நேரடியாக செல்லுத்தப்பட்டு வருகின்றது

• அவசர சிகிச்சைக்கு பணம் தேவையுடயவர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு, மீதிப் பணம் உறுப்பினர்களிடம் சேகரிக்கப்பட்ட பின்னர் வழங்கப்படுகிறது

• நோயால் அவதிபடும் நோயாளிகளை தேவையுள்ளவர்களை இவ்வுதவி தக்க நேரத்தில் முழுமையாக சென்றடைந்துள்ளது

• சந்தா, ஜகாத், சதக்கா நிதி மற்றும் NEEDY DONATIONS அனைத்தும் முழுமையாக தேவையுடையவர்களுக்கு மட்டும் செலவழிக்கப்படுகிறது

• நோயாளிகளின் மருத்துவ செலவை குறைப்பதற்காக, விலைக்குறைந்த அதேநேரத்தில் தரமான மருத்துவத்தை பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது

• குழந்தை பள்ளி/கல்லூரி மாணாக்கர்களின் அவசர சிகிச்சைகளுக்கென்று தனியாக நிதிகள் (Funds) ஏற்படுத்தப் பட்டு, அதன் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன

• உறுப்பினர்கள் செலுத்த விரும்பும் சந்தா, NEEDY DONATIONS, FUND DONATIONS கள் அனைத்தையும், நம் இணையதளத்தில் PAYPAL, BANK TRANSFER மூலமாகவோ அல்லது தங்கள் வசிப்பிடத்தில் உள்ள மைக்ரோகாயலின் ஒருங்கிணைப்பாளரின் மூலமாகவோ எளிதாக செலுத்தும் வசதி ஏற்படுத்த பட்டுள்ளது

• உதவி பெறுபவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களை பற்றி சுய விபரங்கள் மறைக்கப்பட்டு (கீழே உள்ள படத்தில் கண்டவாறு) மருத்துவ உதவிகள் சேகரித்து வழங்கப்பட்டு வருகின்றது

• வெளியே சொல்ல முடியாத கஷ்ட சூழ்நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரையும் இவ்வுதவி சென்றடைந்துள்ளது



துபாய் மற்றும் குவைத் காயல் நல மன்றங்கள் இந்த ஆண்டு ஜனவரி முதல் தங்களின் அனைத்து மருத்துவ உதவிகளையும் மைக்ரோகாயல் அமைப்பு மூலம் செயல் படுத்த தொடங்கி உள்ளதை யாவரும் அறீவீர்கள். இவ்விரு நல மன்றங்களையும், மைக்ரோ காயல் மருத்துவ அமைப்பு மனமாற வரவேற்கிறது. அது போல மற்ற காயல் நல மன்றங்களும் துரிதமாக இணையும் என்ற ஆவலும் உள்ளது.

ஒரு சில தன்னார்வ சகோதரர்களால் இவ்வமைப்பு தொடங்கப்பட்டிருந்தாலும், நம் அனைவர்களின் குறிக்கோளான ஷிபா என்ற ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு உருவாகும் பட்சத்தில் அதன் கீழ் செயல்பட சம்மதம் தெரிவித்ததை இத்தருணத்தில் நினைவூட்டுகின்றோம்.

இரண்டாம் ஆண்டில் புகும் வேளையில், ஏழை எளிய மக்களுக்கு இந்த மருத்துவ உதவி கடந்த வருடத்தை விட இன்னும் அதிக அளவில் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் அட்டகாசமான மருத்துவ உதவி திட்டங்களுடன் மைக்ரோகாயல் இணையதளம் புதுப்பொலிவுடன் இன்று முதல் வெளி வருகிறது.



நீங்கள் இன்டர்நெட்டுக்கு அல்லது மைக்ரோ காயலுக்கு புதியவரா… கவலை வேண்டாம். எப்படி உறுப்பினராகுவது, Needy விண்ணப்பங்களை எப்படி பார்ப்பது, இருந்த இடத்திலேயே இணைய தளம் மூலமாக எப்படி அவர்களுக்கு உதவுவது (பேமண்ட்) என்ற விபரங்களை உள்ளடக்கிய கையேடு (User Guide) தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை காண இங்கே சொடுக்குக.

மைக்ரோகாயலில் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு இலவ கிரெடிட் (ரூபாய் 500) திட்டம்:

மைக்ரோகாயலில் புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கு ரூபாய் 500 இலவசமாக மைக்ரோகாயல் இணையதளம் வழங்குகின்றது. இப்பணம் புதிய உறுப்பினர்களின் மைக்ரோகாயல் அக்கௌன்டில் வரவு (Credit) வைக்கப்பட்டு, அதனை அவ்வுறுப்பினர்கள் தேவையுடைய விண்ணபங்களுக்கு முதலில் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் உறுப்பினரில்லையா... உடனே மைக்ரோகாயலில் உறுப்பினராகுங்கள் இலவசமாக ருபாய் ஐநூறை பெறுங்கள் !



இரட்டிப்பு பலன் (DOUBLE IMPACT) – திட்டம்:

மைக்ரோகாயலில் உள்ள இரண்டு நிதிகளுக்கு (அதாவது EMERGENCY அல்லது CHILD CARE FUND) உதவும் நபர்களின் பங்கிற்கு ஏற்ப அதே மடங்கு தொகையை (Matching Funds) மைக்ரோகாயல் இணையதளமும் அந்த FUND களுக்கு வழங்குகின்றது. உதாரணத்திற்கு ஒருவர் இதன் மூலம் ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு செய்தால் அதே தொகை (ஆயிரம் ரூபாய்) மைக்ரோகாயல் இணையதளம் அன்பளிப்பு செய்யும். இதன் மூலம் ஒருவர் வழங்கும் அன்பளிப்பு / உதவி இரட்டிப்படைகின்றது.



இந்த நல்ல திட்டத்தில் (மைக்ரோகாயலில்) நம் மக்கள் அனைவரையும் உறுப்பினராக இணைய ஊக்குவிப்பதற்காகவும் இரண்டாம் ஆண்டில் இன்னும் நிறைய ஏழை எளிய நம் சொந்தங்களின் துயர்துடைக்கப் படவேண்டும் என்ற நன்நோக்கில், பெயர் குறிப்பிட விரும்பாத தன்னார்வ நபரின் அனுசரணையில் மேற்கண்ட இரு திட்டங் களையும் மைக்ரோகாயல் இணையதளம் குறிப்பிட்ட காலம் வரை செயல்படுத்தும்.

வசதி படைத்தவர்களையே விழிப் பிதுங்க வைக்கும் இன்றைய மருத்துவ செலவுகளினால், முறையான மருத்துவ உதவி உதவிகள் ஆரம்ப சிகிச்சையிலேயே தங்களுக்கு கிட்டாததினால் முற்றிவரும் பிணியுடன் குடும்பம் நடத்தி வரும் ஏழை எளியவர்களின் நிலை மிகவும் பரிதாபம் என்பதனை நாமறிந்ததே. சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதுபோல நலமான உடல் ஆரோக்கியம் நம் சமூகத்தவரிடமிருந்தால் தான், ஒரு வளமான சமுதயாத்தை (காயலை) நம்மால் உருவாக்க முடியும்.

மறுமைக்கு பயன்தரும் மூன்று விடயங்களில் முதன்மையானது, பிறருக்கு செய்யும் நிலையான தர்மம். இந்த நற்சேவையில் நம் காயலர்கள் அனைவரும் உறுப்பினராக இணைந்து தன்னால் இயன்ற உதவியை அது இருநூறோ அல்லது ஐநூறு ஆயிரமோ (சிறு துளியை பெரு வெள்ளமாக்கி) உயிர் காக்கும் அவசர மருத்துவ உதவிகளை தேவையுள்ளவர்களுக்கு இணைந்து வழங்கிட மைக்ரோகாயல் அன்புடன் உங்களை அழைக்கிறது.

வயது முதிர்ந்த வசதியற்ற மூன்று சகோதரர்கள், இருதய, அல்சர் மற்றும் அறுவை சிகிச்சைக்காக உங்களின் உதவியை நாடி காத்திருக்கின்றார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் நம் மைக்ரோ காயல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது. அந்த விண்ணப்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை வழங்கிடுங்கள்.

புதிய அல்லது ஏற்கனவே இணைந்த உறுப்பினர்கள், தங்களால் முடிந்த சந்தாக்களை மாதம்தோரும் மைக்ரோகாயல் அமைப்பிற்கு கொடுக்கலாம். மாதம் ஒரு முறையாவது இணையதளத்திற்கு வந்து விண்ணப்பங்களை பார்த்து, தன்னால் இயன்றதை தேவையுள்ளவர்களுக்கு உதவிட மைக்ரோகாயல் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் மைக்ரோகாயல் அமைப்பை ஈமெயில் மூலமாகவோ அல்லது சகோதரர் தர்வேஷ் அல்லது உங்கள் பகுதியில் வசிக்கும் எங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை நேரடியாகவோ அணுகலாம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சாளை முஹம்மத் முஹிய்யதீன்,
சர்வதேச ஒருங்கிணைப்பாளர், மைக்ரோகாயல்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M Sajith (Dubai) [29 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25278

Great - Keep up the good work ..!!

May Allah's blessings be with you..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved