காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியையொட்டி அடங்கியிருக்கும் மஹான் பேர் மஹ்மூது மஜ்தூபு வலிய்யுல்லாஹ் அவர்களின் 309ஆம் ஆண்டு கந்தூரி விழா, இம்மாதம் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்றது.
14.01.2013 முதல் 26.01.2013 வரை தினமும் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. 13.01.2013 முதல் 24.01.2013 வரை தினமும் இரவு 08.45 மணிக்கு சன்மார்க்கப் பேருரை நிகழ்த்தப்பட்டது.
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “இறைநேசர்களின் இலக்கணங்கள்” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஹாஃபிழ் என்.ஏ.ஜி.ஷெய்கு இஸ்மாஈல் ஃபைஜீ, “நாயகம் ஒரு காவியம்” என்ற தலைப்பிலும்,
‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, “மவ்லிதும், மீலாதும்” என்ற தலைப்பிலும்,
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ, “இஸ்லாமும், குழந்தை வளர்ப்பும்” என்ற தலைப்பிலும்,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ, “இஸ்லாமியர்களின் ஐக்கியமும், எழுச்சியும்” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, “ஷுஹதாக்களின் நினைவு தின சிறப்பு, 73இல் ஒன்று” என்ற தலைப்பிலும்,
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர்களான மவ்லவீ ஏ.கே.முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, “சுன்னத் வல் ஜமாஅத்தும், வஹ்ஹாபிஸமும்” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, “தப்லீக் ஜமாஅத் விமர்சிக்கப்படுவதேன்?” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.முஹம்மத் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, “நவீன உலகில் இஸ்லாமிய சட்டங்கள்” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ, “மஹ்மூது நபியின் மறைமுக ஞானம்” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஹாஃபிழ் என்.எஸ்.எம்.முஹம்மத் யாஸர் அரஃபாத் மஹ்ழரீ, “படைப்புகளுடன் பெருமானாரின் உறவு” என்ற தலைப்பிலும்,
மவ்லவீ ஏ.பி.மொகுதூம் முஹம்மத் மஹ்ழரீ, “அண்ணல் நபி ஓர் அழகிய முன்மாதிரி” என்ற தலைப்பிலும் முறையே உரையாற்றினர்.
கந்தூரி நாளான 26.01.2013 சனிக்கிழமையன்று மாலை 04.30 மணியளவில், மஹான் அவர்களின் பெயரில் மவ்லித் மஜ்லிஸும், இரவு 07.00 மணியளவில் திக்ர் மஜ்லிஸும், கலீஃபா ஷெய்கு நூருத்தீன் தலைமையில் நடைபெற்றது.
அன்று இரவு 08.45 மணிக்கு, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மஹான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கி உரை நிகழ்த்தினார்.
மறுநாள், 27.01.2013 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை தபர்ருக் - நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
நிகழ்வுகள் அனைத்திலும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். கந்தூரி நாளன்று, சிறிய குத்பா பள்ளி மற்றும் தர்ஹா கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை, கந்தூரி கமிட்டி தலைவர் ஹாஜி சாளை எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர் தலைமையில், துணைத்தலைவர் வங்காளம் வி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், செயலாளர் ஹாஜி ஸ்டார் எம்.எஸ்.அப்துல் காதிர், துணைச் செயலாளர்களான ஹாஜி எஸ்.எம்.முஹம்மத் இத்ரீஸ், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் ஜஹூர், ஹாஜி எம்.ஏ.குத்புத்தீன், ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர், எம்.ஓ.பிலால் அமீன், பொருளாளர் டி.எம்.கே.முஹம்மத் ஹஸன் ஆகியோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர். |