இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு (55th Republic Day Sports) தஞ்சாவூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில்,
காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி இறுதிப்போட்டியில் வென்று சாதனை புரிந்துள்ளது.
55வது குடியரசு தின போட்டிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கே. பாஸ்கரன் - ஜனவரி 24 அன்று துவக்கிவைத்த காட்சி
...
26.01.2013 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளி அணியும், திண்டுக்கல் புனித மேரி
மேனிலைப்பள்ளி அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணியினரும் தலா ஒரு கோல் போட்டு சம நிலையில் இருந்தனர். இதனால்
சமனுடைப்பு - டை ப்ரேக்கர் மூலம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-2 என்ற
கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மாநில அளவில் கால்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் வென்று சரித்திர சாதனை புரிந்தமைக்காக, பாராட்டு விழா நேற்று (ஜனவரி 28) காலை
எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ளி) நடைபெற்றது.
வெற்றிப்பெற்ற மாணவர்களுடன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர், இதர நிர்வாகிகள் ...
இந்த மாணவர்கள் பெற்ற வெற்றியில் மற்றொரு சிறப்பம்சம் - இவர்கள் பொறியியல் / மருத்துவ கல்லூரிகளில் பயில விண்ணப்பம் செய்யும் போது (Single Window System),
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் (Sports Quota) இடம்பெற மதிப்பெண்கள் கிடைக்கும். அதன் விபரம் வருமாறு:
தமிழக அரசு கீழ்க்காணும் விளையாட்டு போட்டிகளை பரிசீலனைக்காக அங்கீகரிக்கிறது:
மேலும் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டுகளில், கீழ்க்காணும் போட்டிகளில் வெற்றிப்பெறும் / பங்கேற்கும் மாணவர்களுக்கு -
குறிப்பிடப்பட்டுள்ள வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஓர் ஆண்டில் - ஒரு உயர்ந்த போட்டியில் பெற்ற வெற்றியே கணக்கில் எடுக்கப்படும்.
உதாரணமாக - இவ்வாண்டு எல்.கே. பள்ளி மாணவர்கள் - மாநில அளவில் வெற்றி பெறுவதற்கு முன்னர், டிவிசனல் அளவில் வெற்றிப்பெற்றார்கள். அதற்கான மதிப்பு (ஒவ்வொரு மாணவர்க்கும்) 45. மாநில அளவில் வெற்றிப்பெற்றதற்கு வழங்கப்படும் மதிப்பு 80. இருப்பினும் - இதில் கூடுதலான மதிப்பெண்ணான 80 மட்டும் கணக்கில் எடுக்கப்படும்.
ஒரு மாணவரின் - கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்யும் ஆண்டிற்கு 4 ஆண்டிற்கு முந்தைய சாதனைகளையும் இணைக்கலாம். உதாரணமாக எல்.கே. பள்ளி மாணவர்கள் - கடந்த ஆண்டு, இதே போட்டியில் - மாநில அளவில் - இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அதற்கான மதிப்பெண் - 65 யையும் இணைத்து கொள்ளலாம்.
மாணவர்கள் நிரப்பும் மாதிரி படிவம்...
பொறியியல் கல்லூரிகளில் - 500 இடங்கள் (12 - அண்ணா பல்கலைக்கழகம்; 488 - தனியார் கல்லூரிகள்), விளையாட்டு வீரர்களுக்கு (Sports Quota) ஒதுக்கப்பட்டுள்ளது. 100 இடங்களாக இருந்ததை, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. |