இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்லாமா நஹ்வீ ஆலிம் நற்பணி மன்றம் சார்பாக, வழமை போல இவ்வாண்டும், 24.01.2013 வியாழக்கிழமையன்று இரவு 10.30 மணியளவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பெரிய கல் தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கானாப்பா ஹாஜி எம்.ஏ.கே.செய்யித் அஹ்மத் கபீர், செ.இ.பாதுல் அஸ்ஹப், ஹாஜி நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ சிறப்புரையாற்றினார்.
பின்னர், நபிகளார் புகழ்பாடும் நஅத் மஜ்லிஸ் நடைபெற்றது. அதில், நிகழ்விட வளாகத்தில் இயங்கி வரும் முஹ்யித்தீன் மத்ரஸத்துன் நிஸ்வான் மாணவியர் உட்பட, 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமியர் பங்கேற்று, நபிகளாரின் புகழ் கூறும் பாடல், கவிதை, ஸலவாத், நபிமொழிகளை மழலை மொழியில் கூறினர்.
இரவு 12.00 மணியளவில், மவ்லவீ எஸ்.டி.செய்யித் இஸ்மாஈல் மஹ்ழரீ தலைமையில் புகாரீ மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 03.00 மணியளவில், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஷக்காஃபீ தலைமையில் புர்தா மஜ்லிஸும் நடைபெற்றது.
நள்ளிரவு 03.45 மணியளவில், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் தலைமையில் ரஸூல் மாலை மற்றும் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது.
இறுதியில், ஹாஃபிழ் கே.ஏ.ஷாஹுல் ஹமீத் ஃபைஸல் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ துஆவுக்குப் பின், ஸலாம் பைத்துடன் விழா நிறைவுற்றது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், பாடகர் எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நஹ்வீ எம்.எம்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில், எம்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் உள்ளிட்ட - அல்லாமா நஹ்வீ ஆலிம் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் மூலமாக
நஹ்வீ M.M.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா |