காயல்பட்டினம் பிரதான வீதியில் புதிய சாலை அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் நேற்று துவங்கியது. தற்போது, காயல்பட்டினத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆத்தூரில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் மூலம் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்னும் சில நாட்களில் காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில் துவங்கி, பிரதான வீதி வழியே திருச்செந்தூர் சாலை வரை புதிய சாலை அமைக்கப்படும் என அறியப்படுகிறது.
புதிய சாலை அமைப்புப் பணிகள் துவங்கவுள்ளதையொட்டி, நேற்று மாலை முதல் காயல்பட்டினம் எல்.எஃப்.வீதியில் சாலையின் இரு ஓரங்களையும் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, காயல்பட்டினம் பிரதான வீதி, திருச்செந்தூர் சாலை (கே.டி.எம். தெரு) பகுதியிலுள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்யக் கோரி நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள், நகரின் பல்வேறு அமைப்புகள் மூலம் நெடுஞ்சாலைத் துறையிடம் பல தருணங்களில் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. |