ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 28ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் கடைப்பள்ளி எதிரிலுள்ள அதன் அலுவலக வளாகத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
‘மானுட வசந்தம்’ நிகழ்ச்சி நடத்துனரும், இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் செயலாளரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, “அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள்” என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்.
முன்னதாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை பொறுப்பாளரும், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினருமான ஏ.லுக்மான் திருக்குர்ஆன் வசனங்களை தமிழாக்கத்துடன் வாசித்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எஸ்.எச்.லுத்ஃபீ உள்ளிட்ட மற்றும் செய்திருந்தனர்.
|