தூத்துக்குடியில் நடைபெறும் இருதய நோய் மருத்துவ இலவச முகாமில், அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஷாஜஹான்ஸ் ஜுவல்லர்ஸ், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், வரும் பிப்ரவரி மாதம் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை, தூத்துக்குடி ரோட்டரி சங்க அலுவலகத்தில், இருதய நோய் இலவச பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில், அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை பெற்றிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். |