காயல்பட்டினம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில், நடப்பாண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 01ஆம் நாள் முதல் 13ஆம் நாள் வரை ஒவ்வொரு நாளும் மஃரிப் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸ் நடைபெற்றது.
14ஆம் நாளன்று மஃரிப் தொழுகைக்குப் பின் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகைக்குப் பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ மார்க்க சொற்பொழிவாற்றினார்.
பள்ளி கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி இமாம் ஹாஃபிழ் ரஹ்மத்துல்லாஹ் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50 பெண்கள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துல் ரஹ்மான் தலைமையில், அதன் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, பொருளாளர் கோமான் மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |