தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பல்வேறு தேவைகளுக்காக உதவிகள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 26.01.2013 சனிக்கிழமையன்று ரூபாய் 26,000 தொகையில் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
அலியார் தெருவிலுள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கல்வி - மருத்துவம் - சிறுதொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக 13 பயனாளிகள் உதவித்தொகையைப் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல்:
S.ஷம்சுத்தீன் |