இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், ஜனவரி 26 அன்று (நேற்று) நாடெங்கும் கொண்டாடப்பட்டது. அயல் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் நேற்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி, இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தில், இலங்கைக்கான இந்திய தூதர் அஷோக் கே.காந்தா இந்திய தேசிய கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து, இந்தியர்களை சந்தித்து அவர் குடியரசு தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா சார்பில், அதன் தலைவரும், எழுத்தாளருமான ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக், தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ உள்ளிட்டோரடங்கிய காயலர் குழுவினர் இந்திய தூதரை நேரில் சந்தித்து குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், குழுப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர், இந்திய தூதரகத்தின் இரண்டாவது செயலர் வி.கே.விஸ்வநாதனை காவலங்காவின் தலைவர், செயலர் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஜி B.M.ரஃபீக்,
செயலாளர்,
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா). |