இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.00 மணியளவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி விழாவிற்குத் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபன், துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி நிர்வாகிகளுள் ஒருவரும், காயல்பட்டினம் குத்பா பெரிய - சிறிய பள்ளிகளின் முத்தவல்லியுமான ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
K.M.T.சுலைமான்,
துணைச் செயலாளர்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |