இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான - தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் இன்று காலை 10.00 மணியளவில் குடியரசு தின விழா நடைபெற்றது.
அக்கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தியதுடன், குடியரசு தின வாழ்த்துரை வழங்கினார்.
கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நன்றி கூறினார். மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
முன்னதாக, நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதினார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, பெத்தப்பா சுல்தான், ஜெ.உமர், கே.எம்.என்.உமர், அரபி ஷாஹுல் ஹமீத், ஹாஜி ஆர்.பிஷம்சுத்தீன், ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் உள்ளிட்ட - கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர். |