இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, இன்று காலை 09.00 மணியளவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம் – காவல்துறை மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினார்.
பின்னர், சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட - தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பின்னர், காவல்துறையினருக்கு - தமிழக முதல்வரின் பதக்கங்களை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், அரசின் நலத்திட்ட உதவிகளை அவர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கலைஞர்களுக்கான விருதுகளையும் அவர் வழங்கினார்.
|