இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.45 மணியளவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா விழாவிற்குத் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றி வைத்து, மரியாதை செலுத்தியதோடு, வாழ்த்துரை வழங்கினார்.
கணித ஆசிரியை க.பீர் ஃபாத்திமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர், சுபைதா துவக்கப்பள்ளி மாணவியரின் ஆடல் - பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவில், சுபைதா துவக்கப்பள்ளி தலைமையாசிரியை சைஃபுன்னிஸா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி ஆசிரியையர், அலுவலர்கள் மற்றும் மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக,
ஃபாஸில் ஸ்டூடியோ,
காயல்பட்டினம். |