இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம் நேற்று (ஜனவரி 26) நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. காயல்பட்டினம் மகுதூம் தெருவில் அமைந்துள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில், அப்பள்ளியின் இயக்குநரும் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நேற்று காலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அஹமத் நெய்னா தேசிய கொடி ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காயல்பட்டினம் - ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் துரைப்பாண்டி கலந்துக்கொண்டார். நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியையர், மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர் திரளாகக் கலந்துகொண்டனர்.
|