இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியில் இன்று காலை 08.35 மணியளவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர், பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தேசிய கொடியேற்றி, மரியாதை செலுத்தினார்.
அதனையடுத்து, விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர், தேசிய கொடி வாழ்த்துப்பாடல், தேச பற்றுப் பாடல், எல்.கே.நினைவு பாடல் ஆகிய பாடல்கள், பள்ளியின் பாடல் குழுவினரால் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.டி.இப்றாஹீம் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர் சித்தீக் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர் மவ்லவீ ஜுபைர் அலீ பாக்கவீ நெறிப்படுத்தினார். பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா முன்னிலை வகித்தார்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ,
ஆசிரியர்,
எல்.கே.மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |