இந்தியாவின் 64ஆவது குடியரசு தினம், இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குடியரசு தினத்தையொட்டி, இன்று காலை 09.00 மணியளவில், காயல்பட்டினம் நகராட்சி மன்ற வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அஷோக் குமார் முன்னிலை வகித்தார்.
துவக்கமாக, நகர்மன்றத் தலைவர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் அனைவரையும் வரவேற்றார்.
நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் நெறிப்படுத்தி, குடியரசு தின வாழ்த்து மடலையும் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை நகர்மன்றத் தலைவர் முன்மொழிய, கலந்துகொண்ட அனைவரும் அதனை வழிமொழிந்தனர். பின்னர், நகர்மன்றத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி, எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், பாக்கிய ஷீலா, கே.ஜமால் ஆகிய நகர்மன்ற உறுப்பினர்களும், பொதுமக்களில் சிலரும் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், நகராட்சி ஆணையர் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலை நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பாடினர்.
இவ்விழாவில், நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் - பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், நகர பொதுமக்கள், புறநகர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு, நகராட்சி மன்ற வளாகம் தோரணங்கள் மற்றும் வரவேற்புக் கோலங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
|