ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற மக்கி புகாரீ இன்று மாலை 04.00 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அபூதபீ காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
மன்றத்தின் பொருளாளர் பெருமதிப்பிற்குரிய மௌலவி ஹாபிழ் எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி மஹ்லரி அவர்களின் அன்பிற்குறிய தகப்பனார் ஹாஜி கத்தீப் எம்.எம். செய்யித் முஹம்மத் புஹாரி அவர்கள் ஜனவரி 17ஆம் தேதி அன்று வபாஃ த் ஆன செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றோம். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்து, அவர்களது பிழைகளை மன்னித்து, அவர்களது கபூரை சுவனத்துப் பூங்காவாக அலங்கரித்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என்று இருகையேந்தி வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சிகிறோம்.
மர்ஹூம் அவர்களது பிரிவால் கவலையுற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார், உற்றார், மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அபுதாபி காயல் நல மன்றத்தின் சார்பில் இதயமார்ந்த ஸலாமினை உரித்தாக்கிகொள்வதோடு இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய சபூரன் ஜமீலா என்ற அழகியப் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்திடவும் துஆ செய்கிறோம். ஆமீன்.
வஸ்ஸலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
செய்தித்துறை பொறுப்பாளர்
காயல் நல மன்றம்
அபூதபீ – ஐக்கிய அரபு அமீரகம்
|