திருச்செந்தூருக்கு ஜனவரி 22 அன்று வருகை தந்த தென்னக இரயில்வே கோட்ட மேலாளரிடம் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பாக
மனு அளிக்கப்பட்டது. அது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
திருச்செந்தூருக்கு 22-01-2013-ம் நாள் வருகை தந்த தென்னக இரயில்வே கோட்ட மேலாளர் அவர்களை, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய
பேரவையின் சார்பாக ஹாஜி ஏ.கே.பீர்முஹம்மது, ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், 1வது வாடு உறுப்பினர் ஹாஜி லுக்மான் ஆகியோர் நேரில் சந்தித்து
சால்வை அணிவித்தனர். அதனை தொடர்ந்து நமதூர் இரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மற்றும் மின்சாரம் தடைபடும் நேரத்தில் UPS கருவி வசதி
இருந்தும் பயணச்சீட்டுபதிவு செய்ய மறுக்கபடுவது சம்பந்தமாகவும் மனுவளித்தனர். மனுவை பெற்றுகொண்ட தென்னக இரயில்வே மேலாளர்
அவர்கள் மனுவில் கண்ட வற்றை பரிசிலித்து விரைல் நடவடிக்கை எடுப்பதாக சென்னர்கள்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஏ .ஆர். சேக் முஹம்மது,
செய்தி சேகரிப்பாளர், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை.
|