காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா இம்மாதம் 23ஆம் தேதி புதன்கிழமையன்று (நேற்று), பள்ளி வளாகத்திலுள்ள ஹாஜி எஸ்.ஏ.மீராஸாஹிப் அரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளி ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர் ரஹ்மான் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்களால் பள்ளி வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா பள்ளி ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
பின்னர், இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளரும், திருச்சி ஜமால் முஹம்மத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் சிறப்புரையாற்றினார்.
பின்னர், பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகளில் பள்ளியில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பணப்பரிசும், இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பாட வாரியாக முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பணப்பரிசும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இதர வகுப்புகளில் பயின்று முதலிடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை, சிறப்பு விருந்தினர், பள்ளி தலைவர், தாளாளர் ஆகியோர் வழங்கினர்.
பின்னர், பள்ளி ஆண்டு விழாவையொட்டி அண்மையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர், சிறப்பு விருந்தினருக்கு பள்ளி தலைவரும், பள்ளி தலைமையாசிரியருக்கு சிறப்பு விருந்தினரும் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
பின்னர், பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. ஆண்டு விழாவையொட்டி, அன்றிரவு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், துணைத் தலைவர்களான ஹாஜி எஸ்.அக்பர்ஷா, ஹாஜி எஸ்.எம்.உஸைர், தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை, தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ |