தமிழகத்தில் பல்வேறு நிலையில் உள்ள 130 சாலைகளை மேம்படுத்துவது, வலுப்படுத்துவது மற்றும் மிகவும் பழுதடைந்துள்ள சாலைகளை மறுபடியும் சீராக அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக 211 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று (ஜனவரி 23) வெளியிடப்பட்ட அரசு ஆணையில் காயல்பட்டினம் பைபாஸ் சாலையும் இடம் பெற்றுள்ளது.
இந்தப்பணியை தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நிறைவேற்ற உள்ளது. 3 கிலோமீட்டர், 400 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையை புதுப்பிக்க தமிழக அரசு 324 லட்ச ரூபாய் (3 கோடியே 24 லட்சம் ரூபாய்) ஒதுக்கியுள்ளது.
இதில் 80 சதவீதம் தொகை (2 கோடியே 59 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) - National Bank for Agriculture and Rural Development (NABARD) நிறுவனம் மூலம் கடனாக பெறப்படுகிறது. 20 சதவீதம் தொகை (64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்) - தமிழக அரசு வழங்க உள்ளது.
1. தரமான சாலைகள் ???????????? posted byM.S.Kaja Mahlari (Singapore)[25 January 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25209
தமிழக முதல்வருக்கு நன்றி ! ஒதுக்கப்படும் தொகைகளை முழுவதுமாக பயன்படுத்தி சாலைகள் போடப்பட்டால் சாலைகள் தரமாகவும், உறுதியாகவும், நீண்ட நாட்களுக்கு உழைக்கும் படியும் அமையும். இதற்கான தொகையை தனக்கு என கொஞ்சம் ஒதுக்கி, பெயரளவில் சாலை பணிகள் நடைபெற்றால் சாலைகளின் தரங்கள் " தரங்கெட்டதாகவே அமையும் என்பதை நாம் அனைவரும் நன்றாகவே அறிவோம்.
2. Re:... posted bysyedahmed (GZ, China)[25 January 2013] IP: 14.*.*.* China | Comment Reference Number: 25211
We thank for our honourable CM from the core of our heart for allocated huge sum to renovate our by-pass road for which we have precious possession with an exquisite gift of manner. This is for our long days desire which might have been fetched our dreams true with full effort by our CM's green revolutionery regime with fame. We shall ever grateful to our govt. and express our profound gratitude for having care to remember our KPM , and also we hope to attain several benefits very soon.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross