Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[25 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25210
காயல்பட்டினம் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள்பற்றி ஐக்கிய பேரவை விடுத்த கோரிக்கைகள் வெகு விரைவில் நிறைவேறவும் மக்களுக்கு எல்லா வசதியும் நிறைந்த ஒரு மாதிரி MODEL RAILWAY STATION என்ற உயர்வை இந்த ரயில் நிலையம் பெற்றிட இறைவன் அருள்புரிவானாக.
அதே நேரம் நமதூர் மக்களிடம் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் முறையில் சில குறைபாடுகள் இருப்பதையும் அவதானிக்க முடிகிறது ஊரில் டிக்கெட் எடுக்கும் வசதி இருந்தும் திருசெந்தூர் போய் டிக்கெட் எடுக்கிறார்கள். இதனால் காயல்பட்டினதிலிருந்து எவ்வளவு பேர் பயணம் செய்கிறார்கள் அதனால் ரயில்வேக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்ற கணக்கில் தொய்வு விழுகிறது. நமக்குள்ள குறைகளை சொல்வதற்கு நாம் இங்கிருந்து பயணிக்க வேண்டும். இங்கு வந்து இறங்க வேண்டும். உரிமைக்கு குரல் கொடுக்க, நமது தேவைகளை கண்டிப்புடன் கேட்டு பெறுவதற்கு இந்த புள்ளி விவரம் மிக அவசியம்.
அரசாங்கம் எதில் அதிக லாபம் கிடைக்கிறது என்பதில்தான் குறியாக இருக்கும் நாமும் அப்படிதான்.
இப்போது மதுக் கடைகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது, எவ்வளவு குடும்பங்கள் நடுதெருவுக்கு வந்து சீரழிகின்றன என்பதை முன்னெப்போதையும் விட இப்போது நன்றாக ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசுக்கு எடுத்து சொல்கின்றன. என்றாலும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் அள்ளிக் கொண்டு வரும் அட்சய பாத்திரத்தை எப்படி இழப்பது என்றுதான் அரசுகள் யோசித்து அதை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே பிறருக்கு நன்மை செய்தாலும் உதவி செய்தாலும் அல்லது உவத்திரம் செய்தாலும் அதில் அரசுக்கு என்ன லாபம் என்பதுதான் குறிக்கோளாக உள்ளது.
எனவே நாம் நமதூர் ரயில் நிலையத்தை 100% பயன்பாட்டுக்கு கொண்டுவந்து அரசின் கண்ணை திறந்தால் இன்னும் பெரிய மாற்றங்கள் நடக்கும்.
இன்னொரு செய்தி. நமதூர் மக்கள் முன்பெல்லாம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினால் பக்கத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று அல்லாஹ்வை புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தி நபில் தொழுதபின் ஊருக்குள் செல்வோம். அந்த நிலை அடியோடு மாறி விட்டதால் அல்லாஹ்வின் உதவியும் நின்று விட்டது கூட ஒரு காரணமாக இருக்கலாம். மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தி அந்த பள்ளியையும் ஹயாத்தாக்கி அல்லாஹ்வை சந்தோசப்படுத்தினால் நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இது விஷயமாக முயற்சி செய்யும் எல்லா நல்ல உள்ளங்களும் இந்த கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆவன செய்வார்களாக. இந்த நல்ல நாளில் நல்ல முயற்சிகளில் நல்ல விஷயங்களில் ஊருக்கு நன்மை செய்வதில் தன்னலம் பாராது சேவை செய்யும் ஐக்கிய பேரவை தலைவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross