குற்றவியல் தண்டனைகள் சில விளக்கங்கள்! posted byM.N.L.முஹம்மது ரபீக் (காயல்பட்டினம்)[25 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25219
தற்போது ரிசானாவின் தண்டனையை காரணமாக வைத்து இணையத்திலும் பத்திரிக்கை உலகிலும் பலரும் இஸ்லாமிய சட்டங்கள் பிற்போக்கு தனமானவை என்ற வாதத்தை வலிந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். ரிசானாவின் மேல் இவர்களுக்குத்தான் பாசமும் அன்பும் உள்ளது போலவும் முஸ்லிம்கள் மரக்கட்டைகளைப் போன்று உணர்ச்சியற்று போய் விட்டார்கள் என்றும் எழுதாத பதிவர்கள் இல்லை.
இவர்களுக்கெல்லாம் (மாற்று கருத்துடைய காவி சிந்தனையாளர்கள்) ரிசானாவின் மீது உள்ள பாசத்தை விட இஸ்லாமிய சட்டங்களை எள்ளி நகையாட இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப் பார்க்கிறார்கள். விமர்சனங்களை வைப்பதை நாம் குறை காணவில்லை. அது எப்படிப்பட்ட விமரிசனமாக இருக்க வேண்டும்? தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவரும் முரண்பட போவதில்லை. அது இஸ்லாமிய சட்டமாக இருந்தாலும், உலக சட்டங்களாக இருந்தாலும் தண்டனை முறைகளில் மாற்றங்கள் இருக்கலாமே யொழிய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இங்கு ரிசானா விஷயத்தில் தண்டனையை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட வழி முறைகள், மருத்துவ அறிக்கைகள், வழக்காடு மன்றத்தின் செயல்பாடுகள் இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நாம் வாதத்தில் வைக்கலாம். அது நியாயமானதே. ஆனால் கொலைக்கு கொலை, கண்ணுக்கு கண் என்ற இந்த சட்டமே காட்டு மிராண்டி தனமானது என்ற வாதத்தை வைப்பவர்களுக்கு சில விளக்கங்களை சொல்கிறேன்.
சவுதி அரேபியாவைப் பொருத்த வரை தொழில்கள் அனைத்தும் வெளி நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கடை வேண்டுமானால் சவுதிகளின் பெயர்களில் இருக்கலாம். மாதம் 300 ரியாலோ 500 ரியாலோ சவுதிகளுக்கு கொடுத்து விட்டு முழு தொழில்களையும் கவனிப்பது இந்திய, பாகிஸ்தானிய, பங்களாதேசத்துக் காரர்கள் தான். குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்கள்தான் சவுதிகளின் நேரடி பார்வையில் இருக்கும்.
தற்போது நான் அலுவலக வேலையில் இருக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஃபர்னிசர் ஷோ ரூமில் சேல்ஸ் மேனாக இருந்தேன். தினமும் நடக்கும் அனைத்து வியாபார பணமும் என்னிடமே இருக்கும். ஒரு நாளுக்கு 20000 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் சில நேரம் 50000 ஆயிரம் ரியால்(7 லட்சம் ரூபாய்) கூட எனது பேண்ட் பாக்கெட்டில் இருக்கும். தொழுகை நேரங்களில் கடை பூட்டப்படும் ஆகையால் பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்று எனது ஓனர் சொல்லியிருப்பதால் பணம் என்னிடமே இருக்கும். பல வருடங்கள் வேலை செய்தும் ஒரு முறை கூட எனக்கு திருடர்களிடமிருந்து எந்த பிரச்னையும் வந்ததில்லை.
மறுநாள் இந்த பணத்தை பேங்கில் செலுத்தி விடுவேன். இந்த அளவு பாதுகாப்போடு நான் வேலை செய்ததற்கான காரணமே சவுதி நாட்டின் சட்டங்கள் தான்.
எனக்கு மட்டும் அல்ல இந்த பிரச்னை. சவுதியில் முழுவதும் கடைகளில் நிற்பவர்கள் அதிகம் நம்மவர்களே! கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்ற சட்டம் இருப்பதால் தான் வெளிநாட்டவர்களால் இந்த அளவு நிம்மதியாக தொழில் செய்ய முடிகிறது. இந்த சட்டத்தை நீக்கினால் அதனால் பாதிக்கப்படுவதும் இந்திய பாகிஸ்தானிய மக்களே. ஏனெனில் ஆப்ரிக்கர்களின் கை வரிசை நிறைந்த நாடு இது. கொஞ்சம் சட்டத்தை தளர்த்தினால் கடைகளில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் வெகு இலகுவாக நடக்கும். இந்த அளவு சட்டம் இருக்கும் போதே அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடந்து வருகிறது. எனவே நமது நாட்டைப் போலவே எல்லா நாட்டு சூழ்நிலைகளும் இருந்து விடும் என்று எண்ணக் கூடாது.
மைனர் பெண்ணுக்கு தண்டனை அளிக்கலாமா? என்றும் கூறுகின்றனர். இஸ்லாம் 18 வயதை நிர்ணயிக்கவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் குழந்தை பெறும் பக்குவத்தை அடைந்து விட்டாலே அவர் மேஜராகி விடுகிறார். மும்பை பெண் கற்பழிப்பில் ஈடுபட்ட ஒருவன் 18 வயதுக்கு குறைவானவனே! அவனையும் தூக்கில் இட வேண்டும் என்று பலர் இன்றும் கூறி வருவதைப் பார்ககிறோம். ஆனால் ரிசானா விஷயத்தில் மாறுபட்ட கொள்கையை வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
ரிசானாவை மன்னரே மன்னித்து அவரது அதிகாரத்தை பிரயோகித்து வெளியாக்கியிருக்கலாமே என்று பலர் கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக மன்னர் குடும்பத்திலேயே நடந்த ஒரு நிகழ்வை பார்ப்போம்.
(இக் கருத்தின் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காணலாம்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross