கொலையா?கவனக்குறைவா?இயல்பாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதா? posted byNIZAR (KAYALPATNAM )[26 January 2013] IP: 115.*.*.* India | Comment Reference Number: 25225
தனது கட்டுரைகளில் செய்திகளை ஒரு கோர்வையாக,அனைத்தையும் உள்ளடக்கிய பாணியில் தருவது போல் சாஜஹான் காக்காவின் இந்த கட்டுரையும் அமைந்து இருக்கிறது.இவருடைய கட்டுரைக்கு மறுப்பு தெர்வித்து இருக்கும் சகோதரர் ரபீக் அவர்கள் இலங்கையில் இவர் வசிப்பதனால் அந்த பாசத்தில் பாதிக்கப்பட்ட ரிசானாவுக்கு சாதகமான அமைப்பில் கட்டுரை உள்ளது என்று கருத்து பதிவு செய்து உள்ளார்.அதையே திருப்பி நீங்கள் இருபது வருடங்களுக்கு மேலாக சவுதியில் இருப்பதனால் அந்த நாட்டுக்கு சாதகமாக கருத்து சொல்கிறீர்களா?எனவே வசிக்கும் இடம் மேட்டர் இல்லை,நடந்த தலைவெட்டு நியாமானதா?முறையான சட்ட விதிமுறைகள் பின்பற்ற பட்டதா?பாதிக்கபட்டவர் குற்றவாளியில்லை என நிருபிப்பதற்கு சட்டவிதிகளுக்கு உட்பட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டதா?மொழிபெயர்ப்பு சரியாக நடைபெற்றதா?போன்ற விசயங்கள்தான் உலகளவில் அலசி ஆராயபடுகின்றன.இதைபோன்ற நிலைமையில் ஒரு அமெரிக்கரோ அல்லது இங்கிலாந்து நாட்டவருக்கு ஏற்பட்டால் என்ன நடக்கும்?என்பதல்லாம் தான் உலக அளவில் பேச்சாக உள்ளது.
கொலைக்கு கொலைதான் என்ற இஸ்லாமிய சட்டத்தை குறைகூறவில்லை?அதை இன்றைக்கு இந்தியா போன்ற நாடுகளில் கூட நிறைவேற்ற வேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மேலும் இந்த ரிசானாவிட்கு கொடுக்கப்பட்ட தண்டனை கவனக்குறைவால் அந்த குழைந்தை இறந்ததற்காக கொடுக்கப்பட்டதாக விளக்கி உள்ளீர்கள்,கவனக்குறைவால் ஏற்படும் பலிக்கு பலிதான் இசுலாமிய சட்டமா?என்று அமரிக்காவில் இருந்து கருத்து பதிவு செய்திருக்கும் ரிளுவான் கருத்து சிந்திக்க கூடியதாக உள்ளது. வாகனத்தை ஒட்டி செல்பர்களின் கவனகுரையால் எத்தனையோ உயிர்கள் பலியாகுகிறது அதற்காக ஓட்டுனருக்கு மரணதண்டனையா?உண்மையிலே இதற்கு எனக்கு விளக்கம் தெரியவில்லை சகோதரர் ரபீக் விளக்கம் தெரிந்தால் சொல்லவும்.சவுதிகள் இதயத்தை தொலைத்துவிட்டு இசுலாத்தை கையில் ஏந்துபவர்கள் என்ற மக்கி நூகு மாமா அவர்களின் வார்த்தை அவர்களுக்கு சவுதியில் ஏற்பட்ட பாதிப்பை வெளிக்காட்டுகிறது.
அந்த குழந்தையின் தாய் மன்னித்து இருந்தால் உலகத்தின் அனைவரின் உள்ளதையும் ஆனந்த படுத்தி
இருப்பாள்,சவூதிமன்னர் ,ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் பரிந்துரை,இறுதி வரை எதிபார்த்த உலக அமைப்புகளின் அணைத்து வேண்டுதலையும்,தண்டிப்பதை விட மன்னிப்பதே மேல் என்று இஸ்லாத்தின் வழிகாட்டுதலை சொல்லியும் நிராகரித்த குழந்தையின் தாயின் உள்ளத்தில் ஏன்?அப்படி ஒரு பிடிவாதம் இருந்தது என்பது இறைவனுக்கே வெளிச்சம்.எனவே இதை பற்றி அதிகம் விவாதிப்பதை விட அந்த ரிசானாவின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross