Re:...மருத்துவர் ஹபீப் முஹம்மது posted bymackie noohuthambi (kayalpatnam)[28 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25248
ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தின் செயற்குழு கூட்டம் அவர்கள் அலுவக அறையில் நடத்துவதுதான் நியாயம்.ஆனால் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் என்று நான்கு சுவர்களுக்குள் இருந்து இவர்கள் பேசுவது ஏற்புடையதல்ல.
மானுட வசந்தம் நடத்தி உலக நாடுகளில் வலம் வந்து மக்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் இந்த மருத்துவருக்கு இது ஒரு கௌரவமும் அல்ல, அழகும் அல்ல. தனிப்பட்ட இயக்க கொள்கை விளக்க கூட்டமாக இருந்தாலும் அதை வெளியே மேடை போட்டு பறைசாற்றும் இந்த காலத்தில். அல்லாஹ்வுடன மக்களுக்கு எப்படி நெருங்கிய தொடர்பு வேண்டும். அல்லாஹ் மனிதர்களுக்கு உதவியானவன் என்பதுதான் நிதர்சன உண்மை. ஆனால் நம்மை அல்லாஹ்வுக்கு உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் என்ற அல்லாஹ்வின் குர் ஆன் ஆயத்தை விளக்க வரும் ஹபீப் முஹம்மது அவர்கள், இந்த கூட்டத்தை சீதக்காதி திடலில் நடத்தி எல்லா தரப்பு மக்களும் கேட்க செய்யவேண்டும். உங்கள் மூலம் ஒரு நபர் நல்வழி பெற்றால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தையும் விட உங்களுக்கு சிறந்தது என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி மானுட வசந்த நாயகனின் கண்ணிலிருந்து தப்பியது எப்படி?
ஜமாத்தே இஸ்லாமி என்ற ஒரு இயக்கத்தின் பிடியில் அவர்கள் தன்னை அடக்கி கொள்வதில். ஒரு சின்ன நூல்கண்டு தன்னை சிறைபடுத்தி வைக்க அனுமதிப்பதை என்போன்றவர்கள் சரிகாண முடியவில்லை.தயவு செய்து ஏற்பாட்டாளர்கள் மாற்றி யோசியுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross