Re:... posted byCnash (Makkah)[28 January 2013] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25257
அஸ்ஸலாமு அலைக்கும்!
மேற்கத்திய கலாசார காவலர்களும் தமிழக பாசிச பிரியர்களும் விகடன் நக்கீரன் மனுஷ்புத்திரங்கள் மூலம் கையில் எடுத்து இஸ்லாமிய எதிரிகளுக்கு தீனி போட்டதை இன்று நம் கட்டுரையாளர் இந்த இணையதளம் மூலம் அசை போட்டு இருக்கிறார். அவருடைய கட்டுரையை பற்றி பேசும் முன் மரணித்த அந்த சகோதரிக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் பாக்கியத்தை எண்ணி பெருமை படுவோம் அவருக்காக துஆ செய்வோம்.
இன்றல்ல என்றோ ஒரு நாள் 600 கோடியில் ஒருவராக மரணிக்க இருந்த இந்த சகோதரி ரிசானா, இன்று பல கோடி நன்மக்களின் பிராத்தனையோடு இறைவனை அடைத்திருக்கிறார், அவர் குற்றம் செய்தாரா இல்லையா என்று ஆராயும் தகுதியும் அறிவும் நமக்கு இல்லாவிட்டாலும், இறைவனின் சட்டப்படி அவர் குற்றம் செய்து இருந்தால் இவ்வுலகிலே அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு துய நிலையில் இறைவனை சந்திக்க இருக்கிறார்!! அப்படி குற்றம் செய்யாமல் அநியாயமாக கொலை குற்றம் சாட்டபட்டிறிந்து இவ்வுலகில் தண்டனை பெற்று இருந்தால் மறு உலகில் இவருக்கு செய்யப்பட்ட அநீதிகாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் முதல் தண்டனை வழங்கியவர் வரை மறுமையில் கொண்டு வந்து நிறுத்தபடுவர் !!
அங்கு வழங்க இருக்கும் நஷ்டஈடு மகத்தானது... அவர்களின் நன்மைகள் பறிக்கப்பட்டு இவ்வுலகின் அநீதி செய்யப்பட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்டு மகத்தான நன்மையை பெற்றவராக வர இருக்கிறார்.... நீதி வழங்குவதில் அல்லாஹ் மிக ஞானம் உடையவன்.. மறுமை பேறுகளையும் இந்த நம்பிக்கையும் கொண்டு வாழும் நாம்தான் முஸ்லீம்கள்.. மற்ற மனுஷ்புத்திரங்களின் இருந்தும் நக்கீரங்களிலும் இருந்தும் வேறுபட்டவர்கள்.
இந்த கட்டுரையில் சவுதி அரசை விமர்சிக்கிறோம் என்ற பேரில் அல்லாஹ்வின் சட்டதினோடு விபரீதமாக விளையாடி இருப்பதை ஏனோ இங்கு சிலரும் ஆதரித்து இருக்கிறார்கள் ! இரக்கம் / அனுதாபம் என்ற பெயரில்!! இந்த கட்டுரையின் வரைவுக்கெல்லாம் ஆதாரம் எங்கிருந்து எடுத்தார் என்று தெரியவில்லை! நிச்சயமாக இலங்கை ஊடகங்களும் இஸ்லாமிய எதிர்கொள்கையுடையோரில் மீடியாக்கள் தவிர வேறொன்றும் இருக்க முடியாது!! இவர் எடுத்து காட்டி இருக்கும் நேரில் பார்த்து அந்த பெண்ணுடன் உரையாடிய சாட்சி ஒரே மௌலவி மக்தூம் அவர்கள் மட்டுமே (சவுதியில் மார்க்க பணியாற்றும் தாஈ). இவர் அளித்த செய்தியை கூட நம் கட்டுரையாளர் வேண்டுமென்றே தனக்கு சாதகமான ஒரு பகுதியை எடுத்து விட்டு மற்றதை மறைத்து விட்டார்.
மௌலவி மக்தூம் அவர்கள் குறிப்பிட்டிருந்தார் !! முதல் மொழி பெயர்ப்பு ஒரு கர்நாடகத்தை சார்ந்த (அரசாங்கத்தால் நியமிக்க பட்ட) தமிழ் தெரிந்த ஒருவரால் பெற பட்டு அதில் அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார் என்றும்.. பின்னர் மொழி பெயர்ப்பில் சந்தேக கேள்விகள் அந்த பெண்ணின் புறத்தில் எழுப்பபட்டதால், தமிழகத்தை சார்ந்த மொழிபெயர்ப்பாளர் கொண்டு மீண்டும் வாக்கு மூலம் வாங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இரண்டாவதாக வாங்கபட்ட வாக்குமூலத்தின் அவர் குற்றத்தை மறுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்படி பல சந்தேகங்கள் தோன்றியதால் மீண்டும் ஒரு முறை வெளிநாட்டிற்கு பிரேத சோதனை அனுப்பட்டு அங்கேயும் குரல்வலை நெரிக்கப்பட்டு இறந்ததாக நிருபிக்கபட்டு ரிப்போர்ட் வந்ததாக அவர் குறிப்பிட்டு இருந்தார்... இதை எல்லாம் கட்டுரை எழுதியவர் ஏன் மறந்தாரோ...
மாறாக ஆடு மேய்ப்பவனை வைத்து மொழி பெயர்ப்பு செய்ய பட்டது என்றும் தவறான தகவலை ஏதோ அவர் படித்த பத்திரிக்கை செய்தியை வைத்து எங்கே சொல்லி இருக்கிறார். ஒரு ஷரியத்தை பேணுகின்ற அரசு, குற்றவியல் சட்டங்களில் ஷரியத்தை அமுல்படுத்துகின்ற ஒரு அரசு இப்படி ஆடு மெய்ப்பவனையும் மாடு மெய்ப்பவனையும் வைத்து தீர்ப்பு வழங்கி இருப்பதாக சொல்லி இருப்பது எவ்வளவு அபத்தம்?
சாதாரணமாக 3 மாதங்களின் வழங்க படும் தண்டனை இந்த வழக்கில் 7 வருடம் வரை நீடிக்க செய்ததும் ஆழ்ந்த விசாரனையும் உலக மனித உரிமை நல அமைப்புகளின் தலையீடும் இருந்தும் அதற்கு பின்னும் இது கொலை குற்றம் தான் என்று அவர்களால் அறியப்பட்டு.. பின் பல முயற்சிகள் செய்து அவர்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இறுதியில் அவர்கள் மன்னிக்க மறுக்கவே இத்தண்டனை வழங்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள்!! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வழங்கப்பட்டதல்ல!!
மேலும் கட்டுரையாளர் மன்னிக்க மறுத்த அந்த பிள்ளையின் தாயை விமர்சித்திருக்கிறார்!! அது அல்லாஹ் வழங்கி உள்ள உரிமை அந்த தாய்க்கு!! மன்னிப்பதும் மறுப்பதும்.. நீங்கள் யார் அந்த உரிமையில் தலை இட? ஏன் நம் நாட்டில் உள்ள கேடு கேட்ட சட்டம் போல ஒருவன் தகப்பனை கொலை செய்து அவனுக்கு அளிக்கபட்ட தண்டனையை எவனோ ஒருவன் ஆட்சில் இருந்து கொண்டு அண்ணா பிறந்தா நாளுக்கும் காந்தி பிறந்த நாளுக்கும் வேண்டி மன்னிப்பு வழங்குகிறார்களே அது போல மன்னிக்க வேண்டுமா? அது போல சட்டம்தான் வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா? இங்கே உள்ள இறைவனில் சட்டத்தினால்தான் நாங்களும் எங்கள் பெண்களும் சுதந்திரமாக வெளி சென்று வர முடிகிறது.. இங்கே கற்பழிப்பு கொள்ளை, கொலை இருக்குதா? இது எல்லாம் இல்லை என்றுதானே இன்றைய மேற்கத்திய ஊடகங்கள் கூச்சல் போடுகின்றன??
அவைகளுக்கு சொல்லும் விதமாகதானே இன்நாட்டில் வெளியுறவு துறை அமைச்சர் எங்கள் நாட்டில் சட்டத்தில் தலை இட யாருக்கும் உரிமை இல்லை என்று அறிவித்தார் அது குற்றமா?
இது வெளி நாட்டில் நடந்து இருந்தால் பிள்ளயை கவனிக்காத குற்றத்திற்கு இந்த பெற்றோர் தண்டனை பெற்று இருப்பார்களாம். சில நாட்கள் முன்பு நார்வேயில் ஒரு இந்திய பெற்றோருக்கு நடந்தது போல்!! இந்த மேற்கத்திய சில்லறை சட்டம்தான் மேலாக தோணுதா உங்களுக்கு? ஏன் வேலைக்கு ஆள் அமர்த்துவது இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானதா? பால் குடி தாயார் என்ற பழக்கம கூட இஸ்லாம் அங்ககரித்த ஒன்று என்பதை மறந்தீர்களா?
மேலும் கேட்கிறார் அந்த பெண்ணுக்கு என்ன வந்த சில நாளின் அரபி புலமை எப்படி வந்தது அவள் எசமானியுடன் வாக்கு வாதம் புரிய என்று? ஆனால் சம்பந்தபட்ட பெண்ணுடன் உரையாடிய மௌலவி அவர்கள் அந்த பெண் சம்பவம் நடந்த வீட்டுகாரிடம் பிரச்னை செய்து கோபத்துடன் இருந்ததாகவும் அதனால்தான் அப்பெண் கொலை செய்து விட்டாள் என்று சந்தேகம் வலுத்ததாகவும் சொல்லுகிறார்.... கோபம் கொள்ள அரபிய புலமை தேவை இல்லை.. எப்படி வீட்டுகாரர் அப்பெண்ணிடம் குழந்தையை பார்க்க சொல்லி இருப்பாரோ எப்படி பால் கொடுக்க சொல்லி இருப்பாரோ எப்படி வீட்டை சுத்தம் செய்ய சொல்லி இருப்பாரோ.. அது போலேதான் கோபமும் வெளிகாட்டபட்டிருக்கலாம்.. அதற்காக ஏன் இந்த ஆராய்ச்சி?
அடிமை எண்ணம் நம்மை போன்றோரை இழிவாக பார்ப்பது இதுவெல்லாம் அவர்களது குணம் என்றால் அது அந்த மனிதர்கள் மேல் உள்ள குறை அதற்கு இந்த சட்டம் என்ன செய்யும்.. ஏன் நாம் பார்க்க வில்லையா? வெளிஊர்காரன் என்றும், மவ்லா இஸ்லாம் என்றும் நாம் சிலரை ஒதுக்கவில்லையா.. அது போல் அரபி என்ற பரம்பரை நோய்தானே அது.. அதற்கு நாடு பொறுப்பா??
உங்கள் கட்டுரைக்கு தீனி போட ஒரு சகோதரர் அவர் இகாமா (வொர்க் பெர்மிட்) இல்லாமல் வெளிய சென்றபோது பிடிபட்டு சிறையில் இருந்ததாக குறிப்பிட்டார்!! அவருக்கு தெரியும் இந்நாட்டின் சட்டம்... தெரிந்து கொண்டு ஏன் இகாமா இல்லாமல் வெளியே செல்ல வேண்டும்...? மேலும் அவருக்கு தெரியும் இங்கே நடக்கும் குற்றங்கள் போலி ஆவன தயாரிப்பு, FORGERY / திருட்டு / விபச்சாரம் இவைகளெல்லாம் ஆசியா / ஆப்ரிக்கா குடிமக்களால்தான் பெரும்பாலும் நடக்கிறது என்பது யாவருக்கும் தெரிந்ததே.. அது போன்ற சந்தேக கண் கொண்டு போலீஸ் பார்க்கும்போது இகாம இல்லாமல் வெளியே செல்லும் சிலர் கூட இதனால் பாதிக்கப்படலாம். அதற்காக பெண்டிங்லே உள்ள கேஸ் எல்லாம் கிடச்சவன் பேரில் எழுதும் நம்ம நாட்டு போலீஸ் போல் இல்லாமல்.. உங்கள் இகமா வந்த உடன் சரிபார்க்க பட்டு வீட்டிற்கு அனுப்பட்டு இருப்பீர். இதை கூட கொலை குற்றம் போல எடுத்து சொல்லனுமா இங்கே?
இறுதியாக...
எதை வேணும்னாலும் எழுதலாம் என்றில்லாமல் நடந்ததை பல புறமும் விசாரித்து எழுதுங்கள்... ஒரு புறம் ரிஷானாவிர்க்கு அஞ்சலி செலுத்திய இலங்கை பாராளுமன்றம் மறுபுறம்.. தனது நாட்டு அந்நிய செலவாணியை பெருக்க கடந்த ஆண்டை விட வரும் ஆண்டு இன்னும் அதிகம் பணியாட்களை வெளி நாடுகளுக்கு பார்சல் செய்யும் முயற்சியையும் சேர்த்து எடுத்து .. வருகிறது.. அவர்களின் இரட்டை நிலையை நீங்கள் உணர்ந்தீர்களோ இல்லை இங்கு வாழும் இலங்கை தேசத்தவர் அதிகம் உணர்ந்து இருக்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross