Re:... posted byK S Muhamd shuaib (Kayalpatinam)[30 January 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25286
(எனது முந்தைய கருத்தின் தொடர்ச்சி - பாகம் 2)
மேலும் அந்நாட்டு (சவூதி )சட்டப்படி அந்நிய பெண்கள் தகுந்த ஆண் துணையின்றி (மகரம்) அந்நாட்டுக்குள் வர முடியாது. ஆனால் இந்த சட்டம் பெரும்பாலும் ஹஜ், உம்ரா போன்ற புனித பயணங்களின் போதே கடுமையாக அனுசரிக்கபடுகிறது. வீட்டு வேலைக்காக அழைத்து வரப்படும் லட்சக்கணக்கான பெண்களின் விசயத்தில் இது கண்டு கொள்ளப்படுவதில்லை. விசா ஏஜெண்டுகள் அரசை ஏமாற்றி இவ்வாறு கூட்டி வருகிறார்கள் என்கிற வாதம் எடுபடாது.
தனது வறுமையை விரட்ட, தனது சக்திக்கு மீறி பொருள் செலவு செய்து வரும் பாவப்பட்ட பெண்கள் தனக்குத் துணையாக இன்னொருவரையும் அழைத்து வருவார்கள் என யாராலும் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறானால் இது சட்டமீறல் இல்லையா? தனது சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ள சட்டத்தை எப்படியும் வளைக்கலாமா..? இதுதான் இஸ்லாமிய நீதிநெறியோ ..?
"ரிசானா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறாள்" என்றும் இங்கு ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தனது கஸ்டடியில் உள்ள ஒருவரிடம் போலிஸ் எப்படி வாக்குமூலம் வாங்கும் எனபது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
குற்றங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் மட்டுமே இங்கு பொதுமக்களின் முன்னிலையில் பகிரங்கமாக நிறைவேற்றப்படுகிறது.. குற்ற விசாரணை, வாதி, பிரதிவாதி
வழக்கறிஞர்களின் வாதம், குற்றம் சுமத்தப்பட்டவரின் பதில் -இவைகளெல்லாம் பெரும் மர்மதேசம்.
இன்னொன்றையும் இங்கு கூறியே ஆகவேண்டும்.
உலகில் அன்றாடம் குற்றங்களும், அவற்றுக்கான தண்டனைகளும் நித்தம் நித்தம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சவூதியில் மட்டும் அது ஏன் விவாதப்பொருள் ஆகிறது..? இதுபோன்ற வெளிப்படைத்தன்மை இல்லாததுதான்.
ஒருநாட்டின் நம்பகத்தன்மையான சட்டவெளிப்பாடு எனில் அது அந்த சமூகத்தில் எல்லா நிலைகளிலும் பிரதிபலிக்கவேண்டும். கொலைக்கு மரணதண்டனை, திருட்டுக்கு கை வெட்டுதல் என்பதோடு மட்டும் அது நின்றுவிடக்கூடாது.
சில நாட்களுக்கு முன்பு இதே இலங்கையை சேர்ந்த ஆரியவதி என்ற பெண் கை, கால்களில் ஆணி அறையப்பட்ட காயங்களோடு இலங்கை வந்து சேர்ந்தாள். அவளுக்கு அத்தகைய துன்பம் இளைத்த சவூதிக்கு அந்நாட்டின் சட்டம் என்ன தண்டனையை அளித்தது..? என்று அறிய விரும்புகிறேன்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross