இங்கே எடுத்தால் அங்கே தொங்க விடுவான்...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[01 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25300
நமதூரில் முடுக்குச் சண்டை என்பது குழாயடிச் சண்டை போல வாழையடி வாழையாக வம்சாவழி தலைவலி போல் தொடர்ந்து வருவது வழக்கமான ஒன்றாகிப்போயிற்று. பிறர் நிலத்தில் தனக்கும் கேவலம் ஒரு சில அடிகள் பங்கு உண்டு என பலாய் பிடிப்பதும், தம் சொந்த நிலத்தில் வீடு கட்ட நினைப்பவர்கள் சற்று வெள்ளந்தியாக (வெகுளியாக) இருப்பின் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அழைக்கழிக்கச் செய்து இல்லாத முடுக்கையும், இடம்பெறாத சில அடிகளையும் தன் வருங்கால சந்ததியினரின் சௌகரியத்திற்காக பாத்தியப்பட்டவரிடமிருந்து அநியாயமாக அபகரித்து தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் கீழ்த்தரமான மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பெண்கள் தாம் முண்டியடித்துக் கொண்டு சண்டையிடுவதும், தன் கணவரிடம் இல்லாததைதும் பொல்லாததையும் சொல்லி அண்டை வீட்டுக்காரரோடு புகைமூட்டம் போல பகையை மூட்டி வருகின்றனர். அதுவே பின்னர் கொளுந்து விட்டு எரியும் விரோத நெருப்பாகமாறி மனித நேயத்தையும், மனிதாபிமானத்தையும் பொசுக்கி விடுகின்றது. கட்டுரையாளர் எச்சரித்திருப்பது போல இது போன்ற ஈனச்செயல்களைச் செய்வர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்து நிம்மதி என்பதே கிடைக்காகது. மாறாக இவ்வுலகில் இழிவும், வேதனையும் தான் மிஞ்சும். நாளை நியாயதீர்ப்பு நாளில் அபகரிக்கப்பட்ட நிலத்தை அல்லாஹ் அவர்கள் கழுத்தில் கட்டி சுமக்கச் சொல்லும் போது அட! என் கை சேதமே தவறு இழைத்துவிட்டோமே எனக் கதறுவார்கள்.
காலமெல்லாம் வாய் பொத்தி கைகட்டி நின்று விட்டு நிலம் கைமாறிய உடன் வாங்கினவன் இளிச்சவாயன் என்றதும் பக்கத்து வீட்டுக்காரரோடு மல்லுக்கட்ட நினைப்பது ஒருவகை கோழைத்தனமே! சாதக பாதகங்களை மனம் விட்டு பேசி ஒருவருக்கொருவர் அனுசரித்து இரு தரப்பினருக்கும் பயன்படும் விதத்தில் முடிவுகளை எடுப்பது தான் நல்ல முஃமின்களுக்கு அடையாளம். எனவே சில பொறுப்பற்ற பெண்களின் சுய விருப்பு வெறுப்பால் சொல்லித்தரும் கோள்களை குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்புள்ள ஆண்கள் நம்பக்கூடாது. இன்று அக்காள் தங்கைகளுக்குள் நடக்கும் வளைகுடா போர் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்து நாளைக்கே சீர் சினத்தி எனக் கை கோர்த்துக் கொள்வார்கள். இனி ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் சஞ்சலப்படப் போவது ஆண்களாகிய நாம் மட்டுமே! அல்லாஹ் ஃபஸாதுகளில் இருந்து நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.
ஊர் நடப்புகளை உள்ளதை உள்ளபடி உறுதியான மனதோடு எடுத்துரைத்த N.S.E.மஹ்மூது மாமா அவர்களின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும்.
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross