Re:... posted byM.S.SAYYID MOHAMMED (BANGKOK)[04 February 2013] IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 25344
தலைவியின் இந்த பதில் முலம் செய்திதான் உள்ளதே தவிர மக்களின் ஐயங்களுக்கான விடையில்லை- விளக்கமில்லை.
கேள்வி என்னவெனில் ஆட்சியர் திடுதெப்பென்று வந்தாரா- அறிவித்து விட்டு வந்தாரா?
நிச்சயமாக வரும் முன் வருவதற்கான நோக்கத்தையும் அறிவித்து விட்டே வந்திருப்பார். அப்படியெனில் மன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கக் கூடாது என ஏதும் வழிகாட்டல் உண்டா?
மற்ற இணைய தளங்கள் ஆட்சியர் BIO-GAS திட்டத்திற்கான 3 - 4 இடங்களைப் பார்க்கப் போனதாக செய்தி போட்டுள்ளனர். நீங்களோ ஒரு இடத்தை மட்டும் பார்வை இட்டதாகவும் அதுவும் பனை வாரியத் திற்கான இடமென்றும் சொல்கிறீர்கள்.
ஐக்கியப் பேரவை மூலம் கிடைக்க விருக்கின்ற இடத்தை முதலில் நீங்கள் பரிந்துரை செய்து அங்கு அழைத்துச் சென்றிருக்கலாமே என்பதுதான் அனைவரின் ஆதங்கம். நீங்கள் அதை ஏன் செய்யவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியும்.
இதைத் தெளிவுப் படுத்துங்கள். தெளிவில்லாத ஒரு பதிலைத் தந்து விட்டு மேலும் விபரம் தேவைப் படின் என்னை தொடர்பு கொள்ளவும் என்று போட்டிருப்பது பொறுப்பான பதிலாக இல்லை.
முழுமையான தகவலைத் தந்தாலே போதுமானது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross