பஸாது-க்கான களம் மாறியுள்ளதே தவிர குணம் மாறவில்லை ? posted bySalai.Mohamed Mohideen (USA)[05 February 2013] IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25386
உறுப்பினர்களுக்கு தலைவி தகவல் தெரிவிக்காதது ஏன்?
ஐக்கிய பேரவை தருவதாக தெரிவித்திருந்த இடத்தினை மாவட்ட ஆட்சியரிடம் காண்பிக்காதது ஏன்?
இவ்விரு " நியாயமான " கேள்விகளை (இதில் மாற்று கருத்து இல்லை) அவ்வழியே வந்த உறுப்பினரோ, மற்ற உறுப்பினர்களோ நேரடியாகவோ, அலைபேசி வாயிலாகவோ, இணைய தளங்களோ அல்லது கருத்துக்கள் மூலம் வாசகர்களாகிய நாம், தலைவியிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம்.
அதை விட்டு, ஐக்கிய பேரவையின் பெயர் வரக்கூடாது என்று தலைவி எண்ணுவது போல நாமே கற்பனை கொள்வது, நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் என்று இருவருக்குள் சிண்டு முடிவது, சந்தேகப்படுவது, கண்டனம் தெரிவிப்பது, & பஸாது பரப்புவதுதான் நம்முடைய எண்ணமேன்றால் .... பஸாது பேசுவதற்க்கு "களம்" தான் (தெரு/சங்கம் -> இணையதளம்) மாறியிருக்கின்றதே தவிர, நம்முடைய குணம் மாறவில்லை.
நமது மனதிற்குள் மறைத்து வைத்திருக்கும் சுய விருப்பு - வெறுப்புகள், பொதுநலத்தை உரசிப்பாக்கின்றதோ என்று எண்ண தோணுகின்றது. அது மட்டுமன்றி சிறு விடயங்கள் கூட இன்று நமதூரில் ஒரு சிலரால் வேண்டுமென்றே (?) அரசியலாக்கப் படுகின்றது... அதற்கு ஊடகமும் வாசர்களின் கருத்து சுதந்திரமும் ஒரு வகையில் காரணமோ என்ற அச்சமும் ஏற்படுகின்றது.
நகர்மன்ற (குறிப்பாக தலைவி) விடயங்களில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புவதில் அப்படி என்னதான் ஒரு ஆனந்தம்? இன்னும் எத்தனை காலம்தான் இப்படியே தலைவிக்கும் ஐக்கிய பேரவைக்கும் கொளுத்தி போட்டு அதில் குளிர் காய போகின்றனர் என்று தெரியவில்லை. கொளுத்தியது என்னமோ ஒரு சிறு தீக்குச்சிதான்! ஆனால் அது குடிசை (ஒற்றுமையை) எரிக்க பயன்பட்டதா அல்லது இருளை நீக்கி சமுதாயத்திற்கான விடியலை தரும் ஒளியாக பயன்பட்டதா என்பது அவரவருக்கு தெரியும். தலைவிக்கும் ஐக்கிய பேரவைக்கும் நல்லதொரு இணக்கத்தை ஏற்படுத்த இவர்களில் ஒருவர் கூட முயற்சி செய்திருப்பார்களா என்று தெரியவில்லை.
இதோ அறிக்கை அக்கப்போர் தொடங்கிவிட்டது. உண்மையிலேயே இது ஒற்றுமையை ஏற்படுத்த போகின்றதா அல்லது சிறு விடயங்களை பூதாகரமாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியா என்பது ரப்புல் ஆலமீனுக்கே வெளிச்சம்.
இது போன்ற குழப்பம் விளைவிக்கும் “நம்பத்தகுந்த வட்டார செய்திகள்”, அறிக்கைகள் கருத்துக்கள் அனைத்தும், ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் நமது சமுதாய ஒற்றுமையை சரிபடுத்த கண்ணியமிக்க நமதூர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் & முஸ்லிம் கட்சியின் செயலாளர் உட்பட பலர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக தான் இருக்குமே தவிர முட்டுகொடுக்க உதவாது என்பதனை உணருங்கள்.
இதுபோன்று நம்மை நாமே ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்வதை விட, ஊர் ஒற்றுமைக்காக நம் சகோதரர்கள் / பெரியவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் வெற்றி பெற துஆ செய்வோம். தனி நபர் விருப்பு - வெறுப்பு ஈகோக்களை, மார்க்க மற்றும் அனைத்து கருத்து வேறுபாடுகளை மறந்து, நமக்குள் விட்டு கொடுத்து சகோதரத்துவம் மேம்பட செய்வோம் & ஊர்/பொது விடயங்களில் ஓரணியில் திரள்வோம். அதற்காக நமதூர் இணைய தளங்கள் பாடுபடட்டும் !
" Apologizing doesn’t mean that I'm wrong, and u r right… It means that I value our relationship much more than ego ! "
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross