Re:...மருத்துவர் எனும் மலக்கல் மௌத் posted bymackie noohuthambi (kayalpatnam)[11 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25464
கட்டுரையை படித்தபோது அடிவயிற்றில் அமிலம் சுரந்தது, கண்கள் கண்ணீரை சுரந்தன. எல்லா உயிர்களும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும் என்ற இறை வசனத்தை ஞாபகபடுத்தி "வ இதா அசாபத் ஹும் முசீபதுன், காலூ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், உலாயிக்க அலைஹிம் சலவாத்தும் மின் ரப்பிஹிம் வரஹ்மா.".என்ற இறைவனின் ஆறுதல் மொழியையும் வாக்குறுதியையும் முழுமையாக நம்பி அல்லாஹ்விடம் தொழுது து ஆ கேளுங்கள். மர்ஹூமா அவர்களுக்கு அல்லாஹ் மேலான சொர்க்க பதவியை கொடுப்பானாக.
இந்தமாதிரி மருத்துவமனைகள் நம் நாட்டில் நிறையவே உள்ளன, மருத்துவ படிப்பே பெரும் சுமையாக போய்விட்டது. அவ்வளவு செலவு செய்து படித்து வருபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் மருத்துவத்தை சேவை மனப் பான்மையுடன் கடமை உணர்வுடன் செய்கிறார்கள். மற்றப்படி எல்லாமே பணம்தான். கிறிஸ்தவ மருத்துவமனைகள் ஓரளவு பரவா இல்லை என்று சொல்லலாம். இது நான் கண்ட நிதர்சன உண்மை.
கல்லூரிகளில் கூட கிறிஸ்தவ கல்லூரிகளில் கட்டுப்பாடு ஒழுக்கம் இருப்பதை நாம் காண முடியும். நீங்கள் குறிப்பிடும் மெத்தனம், நோயாளிகளிடம் பரிவு காட்டாமல் எரிந்து விழும் தன்மை எல்லா இடத்திலும் இருக்கிறது. தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்பதால்தான் பெண்களை செவிலியர்களாக நியமிக்கிறார்கள். அந்த இயற்கையான சுபாவமும் அவர்களிடமிருந்து காணாமல் போனதற்கு என்ன காரணம். ஒன்றும் புரியவில்லை.
என்னதான் உலகம், மருத்துவம் முன்னேறி இருந்தாலும், மனித நேயம் கனிவு, பாசம் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டும் நல்லுணர்வு எல்லாம் நம் மக்களிடமிருந்து விடை பெற்று பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் பாழாய் போன உலகமாக இது மாறிவிட்டதற்கு முக்கிய காரணம் இறை நம்பிக்கை இறை அச்சம் நபிகள் நாயகத்தின் நற்பண்புகள் குழந்தை பருவத்திலேயே நம் மக்களின் பிஞ்சு உள்ளங்களில் உட்செலுத்தி வளர்கப்படாததுதான் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். இதில் அலோபதி என்ன வேறு சிகிச்சை முறைகள் என்ன. நீங்கள் சொன்னமாதிரி மருத்துவர்களே மல்லக்கல் மௌத்துகளாக நம்மை சுற்றி வலம் வருகிறார்கள்.
அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்து விட்டது என்று நம்மை நாமே சாமாதானப் படுத்திக்கொண்டு விழி நீர் துடைத்துக் கொண்டு ஆக வேண்டியதை கவனிப்போம். உங்கள் துயரங்களில் நானும் பங்கு கொள்கிறேன். சாகா வரம் பெற்றவர்கள் யாரும் இல்லை. இன்னக மையிதுன் வ இன்னஹும் மையிதூன்.....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross