Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:23:48 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 75
#KOTWEM75
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 3, 2013
மருத்துவ மனையா? மரண மனையா?

இந்த பக்கம் 3312 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தனது கருணையை வினியோகிப்பதற்காக இறைவன் இரண்டு பிரதி நிதிகளை இந்த உலகிற்கு அனுப்பினான் : அதில் ஒருவர் தாய். மற்றொருவர் மருத்துவர். தூத்துக்குடியில் உள்ள மருத்துவ மனை ஒன்றில் எனது சகோதரியை சேர்ப்பதற்காக வண்டியில் சென்றோம். வண்டியிலிருந்து பெட்டி படுக்கைகளை கீழே இறக்கி வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் நெஞ்சை துளைப்பது போன்ற ஓவென்று மரண ஓலம் ஒன்று வெடித்து மருத்துவமனை முழுக்க சிதறியது.

உயிரற்ற உடல் ஒன்று அந்த மருத்துவ மனையின் கழிப்பறையிலிருந்து வெளியே எடுக்கப்படுகின்றது. இறந்தவரின் மனைவிதான் ஓவென்று கதறியவர் இதய நோய்க்காக உள் நோயாளியாய் தங்கி மருத்துவம் எடுத்து கொண்ட ஒருவர் மருத்துவம் முடிந்து வீடு திரும்ப இருக்கையில் மருத்துவ மனையின் கழிப்பறைக்குள் சென்றிருக்கின்றார். சென்றவருக்கு அங்கேயே மாரடைப்பு வந்து உயிர் பிரிந்து விட்டது.

சரியாக பொங்கல் தினத்திற்கு முந்தைய நாள் நடந்த நிகழ்வு இது.

மருத்துவ மனையின் நுழைவாயிலிலியே நடந்த இந்த அமங்கல நிகழ்வினால் நாங்கள் திகைத்தோம். கண் முன்னர் நடந்த இறப்பும் ஓலமும் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என எங்களை கேட்பது போல் இருந்தது. நாங்கள் உள் நோயாளியாய் சேர்ப்பதற்காய் கொண்டு வந்த எங்கள் சகோதரியின் உடல் நிலை நெருக்கடி கட்டத்தில் இருந்தது. வேறு வழியின்றி அதே மருத்துவ மனையில்தான் அவரை சேர்த்தோம். சகோதரிக்கு சிகிச்சை அளித்து வந்த தூத்துக்குடியைச்சார்ந்த நுரையீரல் நிபுணரின் வலுவான பரிந்துரையின் பேரில்தான் இந்த மருத்துவமனைக்கு நாங்கள் வர வேண்டியதாயிற்று.
தீவிர மருத்துவ பிரிவில் எங்கள் சகோதரி சேர்க்கப்பட்டார்.அவருக்கு நுரையீரலில் பாதிப்பு. நாளடைவில் அது இதயத்தின் செயல்பாட்டையும் பாதித்தது . அதன் விளைவாக கால்கள் வீங்கத்தொடங்கி விட்டிருந்தன. அவரை தீவிர மருத்துவ பிரிவில் சேர்த்து விட்டு குடும்பத்தாராகிய நாங்கள் மருத்துமனையில் அறை எடுத்து தங்கினோம். அந்த அறையின் கதவில் ATTENDANT ROOM என பவிசாக எழுதி ஒட்டியிருந்தது.

அறை வாடகை ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்கள். ஆனால் மிகவும் இடுங்கிய காற்றோட்டம் இல்லாத அறை. கொண்டு வந்த அத்தியாவசிய பொருட்களை வைப்பதற்கான எந்த வசதியும் இல்லை. தீவிர மருத்துவ பிரிவானது இரண்டாம் மாடியில் இருந்தது. ஆனால் எங்கள் அறையோ முதல் மாடியில் இருந்தது. எல்லா அடிப்படை வசதிகளிலிருந்தும் இந்த அறை தொலைவில் இருந்தது . ஒவ்வொரு தேவைக்கும் அலைய வேண்டியிருந்தது. இரவில் கதவை திறந்தால் வாடகை ஏதும் தராமலேயே கொசுக்கள் இந்த அறைக்கு குடும்ப சகிதம் வருகை தரும். மருத்துவமனையில் சேர்த்த முதல் நாள் சகோதரியின் உடல் நிலை தேறுவது போல் அறிகுறிகள் தென்பட்டன. மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்த மருத்துவர் அடுத்த நாளே பொங்கல் விடுமுறை என்று வெளியே சென்று விட்டார். இத்தனைக்கும் அந்த மருத்துவரின் மனைவிக்கு சொந்தமான மருத்துவமனை அது.

நோயாளியான சகோதரி செவிலியர்களின் (நர்ஸ்) பொறுப்பில் விடப்பட்டார். அந்த செவிலியரிடம் எந்த கருணையும் எஞ்சி இருக்கவில்லை. நோயாளியின் உறவினர்களிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தனர். தீவிர மருத்துவ பிரிவின் பக்கமே நெருங்க விடாமல் விரட்டி அடித்து கொண்டிருந்தனர்.

நோயாளிக்கு கொடுக்கச்சொல்லி செவிலியரின் கையில் உணவு பாத்திரத்தை கொடுத்து விட்டு வருவோம். நீண்ட நேரம் கழித்து நாங்கள் நோயாளியை பார்க்க போகும்போது அந்த உணவு பாத்திரம் அப்படியே இருக்கும்.இது பல தடவை நடந்தது. அந்த மருத்துவ மனையை விட்டு வெளியேரும் வரை வேறு வழியின்றி நாங்கள்தான் நோயாளிக்கு உணவை ஊட்டினோம். இவர்களின் இந்த இரக்கமற்ற அலட்சிய நடத்தைக்கு காரணம் என்ன ? மருத்துவ மனை நிர்வாகம் அவர்களுக்கு கொடுக்கும் அற்ப சொற்ப ஊதியமா? அல்லது மண்ணின் மணமா? எது என தீர்மானிக்க முடியவில்லை.

தங்கும் மருத்துவர் (ரெசிடெண்டியல் மெடிக்கல் ஆஃபீஸர்) ஒருவரும் அங்கிருந்தார். அவரோ ஒரு பயிற்சி மருத்துவர். அவருக்கு தமிழும் சரியாக தெரியாது. அவருடைய தாய் மொழி ஹிந்தி. நாங்கள் ஒன்று கேட்க அவர் ஏதோ ஒன்று சொல்ல முயற்சித்தார். யாரிடமும் கோபப்படக்கூடிய சூழ் நிலையில் நாங்கள் இல்லை.

நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய மருந்தின் பட்டியலை அவ்வப்போது தந்து கொண்டே இருந்தனர். அந்த பட்டியலில் செவிலியருக்கான முக மூடியும் கையுறையும் தலா இரு சோடிகள் எழுதப்பட்டிருக்கும். இது தினசரி நடந்தது. இத்தனைக்கும் எங்கள் சகோதரியுடன் சேர்த்து அந்த தீவிர மருத்துவ பிரிவில் பல நோயாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அங்கு இருந்ததோ ஒன்று அல்லது இரண்டு செவிலியர்கள்தான். அவர்களுக்கு இத்தனை முகமூடிகளும் கையுறைகளும் தேவையில்லை. மேலதிகமானவற்றை கடைந்து கஞ்சியாக்கி குடித்தார்களா அல்லது அவை மருத்துவமனையின் மருந்து விற்பனை கடைக்கே மீண்டும் அனுப்பினார்களா ? யாருக்கு தெரியும் ? ஒன்றரை நாள் இப்படியாக கழிந்தது. மேலே சொன்ன குறைபாடுகளை நாங்கள் பெரியதாக நினைக்கவில்லை. நோயாளி தேறி விடுவார். ஓரிரு நாளில் நாமும் வீட்டிற்கு சென்று விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் நாங்களும் சும்மா இருந்து விட்டோம்.


மறு நாள் முக்கிய மருத்துவர் வந்து பார்த்து விட்டு நோயாளி உடலானது மருத்துவத்திற்கு மிக குறைவாகவே ஒத்துழைக்கின்றது . நீர் இறங்கவில்லை என ஒற்றை வரியில் கூறி விட்டு வேகமாக சென்று விட்டார்.ஆதங்கத்திலும் தவிப்பிலும் இருந்த எங்களின் மன நிலை மேலும் கலங்கியது. மருத்துவமனையில் சேர்க்கும் வரை தெளிவான நினைவுடன் இருந்தார் சகோதரி. இதய செயல்பாட்டு குறைவினால் ஏற்பட்ட கால் வீக்கத்தை தவிர வேறு பிரச்சினைகள் அவரின் உடலில் இல்லை.

ஆனால் மருந்துகள் உடலில் ஏறத்தொடங்கிய இரண்டாம் நாளன்று அவரின் தன்னுணர்வில் தடுமாற்றம் ஏற்பட்டது. கேட்கும் திறனும் குறைந்தது. சிறு நீரகமும் செயலிழந்தது முக்கிய மருத்துவரிடம் விளக்கம் கேட்கலாம் என காத்திருந்தோம். ஆனால் அவரை சந்திக்கவே முடியவில்லை. செவிலியர்களிடமும் நெருங்கவே முடியவில்லை. பசித்திருக்கும் காவல் நாய் போல பாய்ந்தனர்.

முக்கிய மருத்துவர் எப்போது வருவார் என மருத்துவ மனை பணியாளர்களிடம் கேட்டால் ஆளுக்கொரு நேரத்தை சொன்னார்கள். இதற்கிடையில் எங்கிருந்தோ மாய வேகத்தில் வந்த மருத்துவர் எங்களின் நோயாளியை ஒரு சில நிமிடங்கள் மட்டும் பார்த்து விட்டு வெளியே வந்தார். காத்திருந்த எங்களை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அவர் பாட்டிற்கு வேகமாக வெளியில் சென்று விட்டார்.

இதை இப்படி விட்டால் சரி வராது என முடிவெடுத்து மருத்துவர் வரும் வழியிலேயே நாங்கள் மாலையில் இருந்து இரவு வரை மணிக்கணக்கில் காத்து கிடந்தோம். ஒரு வழியாக மருத்துவர் வந்தார். எங்களை கடந்து சென்றார். ஒன்றும் சொல்லவில்லை. வழியில் வைத்து கேட்க வேண்டாம். அவரின் தனியறையில் சென்று கேட்கலாம் என முயற்சித்தோம். ஆனால் பணியிலுள்ள செவிலியர் எங்களை விடவில்லை. மருத்துவர் புற நோயாளிகளை பார்த்து விட்டுதான் தீவிர மருத்துவ பிரிவிற்கு செல்வார் என கூறினர்.

புற நோயாளிகளை மிக நிதானமாக கவனித்து விட்டு ஒரு வழியாக வெளியே வந்தார் மருத்துவர். வந்தவர் நேராக தீவிர மருத்துவ பிரிவிற்கு சென்றார். நாங்களும் அவரின் பின்னாடியே சென்று வெளியில் காத்திருந்தோம்.போன வேகத்திலேயே வெளியே வந்து விட்டார். வேகமாக எங்களை கடந்து செல்ல முயற்சித்தவரை நாங்கள் வழி மறித்தோம். நான் கொஞ்ச நேரத்தில் உங்களை கூப்பிடுகின்றேன் எனக்கூறி விட்டு தனது தனியறைக்குள் மீண்டும் சென்று விட்டார்.

எஞ்சியிருந்த புற நோயாளிகளயும் பார்த்து முடித்த பிறகு எங்களில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்தார். “நோயாளிக்கு மருத்துவம் பலனளிக்க மறுக்கின்றது. எனவே அவரை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்” என குளிர்ந்த காற்று நிறைந்த அந்த அறையில் மெதுவான குரலில் சொல்லி முடித்தார். அந்த சொற்களை கேட்ட நொடியிலிருந்து எங்கள் அனைவரின் மனத்துணிவு, நிம்மதி அனைத்தும் மாடியிலிருந்து கொட்டப்படும் மண் போல பொல பொல என உதிர்ந்து விட்டது. சும்மா பேசிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தவளை கொண்டு போய் மருத்துவம் என்ற பெயரில் படித்த நாகரீக கொலைகாரர்களிடம் ஒப்படைத்து விட்டோமே ? என்ற குற்ற உணர்வு எங்களை வேட்டையாடியது. அப்போது நாங்கள் இருந்த செத்த மன நிலையில் எந்த விளக்கத்தையும் யாரிடமும் கேட்க இயலவில்லை.

சகோதரியின் உடல் நிலையை அந்த முக்கிய மருத்துவர் ஒரு நாளைக்கு முன்னதாகவே எங்களிடம் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். மேல் மருத்துவத்தைப்பற்றி உடனடியாக முடிவெடுத்திருக்கலாம். ஆனால் அந்த மருத்துவ கொலையாளி தனது மனதில் வேறு ஒரு கணக்கை போட்டு வைத்திருந்ததை எங்களால் உணர முடியாமலே போய் விட்டது.

எதிரியை பணம் வாங்கிக்கொண்டு கொல்லும் கூலிப்படைகளை பற்றி நமக்கு தெரியும். ஆனால் நம்மைக்கொல்லவே நம்மிடம் பணம் வாங்கும் நவீன கூலிப்படைக்கு இந்த மருத்துவமனையை விட வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா? உயிருக்கு போராடும் சகோதரியை நாகர்கோவிலிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தோம். போகும் முன்னர் மருத்துவ கட்டண கணக்கை தீர்க்க வேண்டுமே?

எனவே மருத்துவ கட்டண விவரப்பட்டியலை கொண்டு வாருங்கள் என மருத்துவமனை வரவேற்பாளரிடம் கேட்டோம். நொடிப்பொழுதில் விவரப்பட்டியல் எங்கள் கைக்கு வந்து சேர்ந்தது. வழமைபோலவே கட்டணங்களை வைத்து தீட்டியிருந்தார்கள். விவரப்பட்டியலை வாசித்து பார்த்ததில் செய்யாத மருத்துவத்திற்கும் சேர்த்து கட்டணம் தீட்டப்பட்டிருந்தது. இது என்ன ? என்று நாங்கள் கேட்கவும் சுதாரித்துக்கொண்டார்கள். சென்னையில் ஓடும் புற நகர் மின் தொடர்வண்டியின் பாதையில் பலர் அடிபட்டு விழுவார்கள். அடிபட்டவர்கள் கடுமையான காயங்களுடன் தன்னுணர்வு இழந்து கிடப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள். அவர்கள் அடிபட்டு விழுவதற்காகவே காத்திருந்தது போல சிலர் ஓடோடி வருவர். விழுந்து கிடக்கும் ஆளின் கையிலிருக்கும் கடிகாரம் ,செல் பேசி, சட்டைப்பையில் இருக்கும் பணம் ஆகியவற்றை வேக வேகமாக சுருட்டிகொள்வார்கள்.

பாதையில் அடிபட்டு கிடப்பவரிடம் திருடும் கொடூரமான போக்கிரிகளுக்கும் இந்த 24 மணி நேர கொலை கொள்ளை மருத்துவமனைகளுக்கும் என்ன வேறுபாடு? தூத்துக்குடியில் 4 நாட்கள் நாகர்கோவில் மருத்துவமனையில் 3 நாட்கள் ஆக மொத்தம் 07 நாட்கள் உயிரை தக்க வைப்பதற்காக வலி மிகுந்த போராட்டத்தை நடத்தி இறுதியில் தோற்று விட்டாள் என் சகோதரி.

மற்ற கட்டுரைகளை எழுதுவது போல் இந்த கட்டுரையை எளிதாக நான் எழுதிட இயலவில்லை. துயர் மிகுந்த அந்த 07 நாட்களுக்குள் நிறைந்திருக்கின்ற ஒவ்வொரு கணமும் இந்த கட்டுரையை எழுதும்போது என்னுள் மீண்டும் நிகழ்கின்றது. வாழ்வும் இறப்பும் வல்லவன் விதித்தபடிதான் நடக்கும். ஆனால் இயற்கை சுழற்றும் இந்த இரு முனை பிரம்பை மருத்துவக்கொலையாளிகள் கன்னக்கோலாக மாற்றுவதுதான் கொடுமையானது.

நமது உடல், நமது நோய், தகுந்த மருத்துவ முறை , திறமையும் மனித நேயமும் நிறைந்த மருத்துவர்கள் குறித்த அறிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். நமதூரில் இயங்கும் மருத்துவ தன்னார்வ நிறுவனங்களிடம் இது பற்றிய பட்டியல் இருந்தால் நன்றாக இருக்கும். இதன் மூலம் விவரமறியாத எளிய மக்கள் சாத்தானின் சாவுத்துறை பிரதி நிதிகளிடமிருந்து காப்பாற்றப்படுவார்கள். என் சகோதரி வாழ்வின் இறுதித்துளி வரை தன் நோயுடன் நடத்திய போராட்டமானது ஆங்கில மருத்துவ முறை , மாற்று முறை மருத்துவம் பற்றிய எனக்கிருந்த மனப்பதிவை மேலும் உறுதியாக்கியுள்ளது. அது பற்றிய கருத்துக்களுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

உயிருக்கு நெருக்கடியான கட்டம், நோய் முற்றிய நிலை ,விபத்து , அறுவை மருத்துவம் போன்றவற்றிற்கு அலோபதிதான் சிறந்த மருத்துவ முறையாகும். ஆனால் நமக்கு வரும் எல்லா நோய்களுக்கும் ஆங்கில அலோபதி மருத்துவத்தை மட்டுமே நாம் நாடுவது என்பது சரியான அணுகு முறை இல்லை. நோய்களை அது உடனடியாக தீர்க்கின்றது என்கின்ற வாதத்திலும் முழு உண்மை கிடையாது. அது சர்வ ரோக நிவாரணியும் இல்லை. ஆங்கில அலோபதி மருத்துவர்களில் மனித நேய மிக்கவர்கள் இருக்கலாம். ஆனால் இந்த மருத்துவ முறை மிக அதிகமான பணச்செலவு பிடிக்கக்கூடியது ஏழை எளியவருக்கு எட்டாதது . இதற்காக சொத்தையும் நகையையும் விற்றவர்கள் கடன் பட்டவர்கள் ஏராளம் . இவ்வளவு பணத்தை இழந்த பிறகும் பெரும்பாலானோருக்கு முடிவு சுபமாக அமைந்ததில்லை. அத்துடன் இவை வேண்டாத பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியதாகும். இது ஆங்கில அலோபதி மருத்துவர்களே பல முறை ஒத்துக்கொண்ட விஷயமாகும்.

பெரும்பாலான சமயங்களில் நோயை விட இந்த மருத்து முறை கொடுமையானதாக இருக்கின்றது. எனவே நாம் மாற்றுமுறை மருத்துங்களையும் நாட வேண்டும். மாற்றுமுறை மருத்துவமானது செலவு குறைந்தது.அதன் மருந்துகளும் எளிதில் கிடைக்கக்கூடியது. சிறிய பெரிய பக்க விளைவுகள் இல்லாதது. நோயை முற்ற விட்டு ஆங்கில மருத்துவத்தின் கூரிய பற்களுக்குள் சிக்கி அரைபடுவதை விட நோயின் தொடக்கத்திலேயே மாற்றுமுறை மருத்துவத்தை அணுகி விடுவதுதான் சிறந்த வழிமுறையாகும்.

சேவை உள்ளமும் அர்ப்பணிப்பும் மிக்க மைக்ரோ காயல் உள்ளிட்ட மருத்துவ தொண்டு நிறுவனங்கள் இந்த விஷயங்களை கையில் எடுத்தால் நமதூரின் மருத்துவ துயருக்கு நல்லதொரு தீர்வு பிறக்கும் இன்ஷா அல்லாஹ்!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: JAINULABDEEN (RAHIMA-DAMMAM) on 03 February 2013
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25327

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).

சகோதரர் சாலை பசீரின் சகோதரியின் மறைவிற்கு அன்னாரை பிரிந்து வாழும் அவர்களின் குடும்பத்தாருக்கு சபூர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமின்.

சகோதரர் சாலை பசீர் அவர்கள் கூறியது போன்று உயிருக்கு நெருக்கடியான கட்டம், நோய் முற்றிய நிலை ,விபத்து , அறுவை மருத்துவம் போன்றவற்றிற்கு அலோபதிதான் சிறந்த மருத்துவ முறையாகும். ஆனால் நமக்கு வரும் எல்லா நோய்களுக்கும் ஆங்கில அலோபதி மருத்துவத்தை மட்டுமே நாம் நாடுவது என்பது சரியான அணுகு முறை இல்லை.

எனவே இன்றைய நவீன காலத்தில் தற்போது அக்கு பஞ்சர் மருத்துவம் உள்ளது இது தாங்கள் அனைவர்களும் அறிந்ததே. இது பல்வேறு விதமான நோய்களுக்கும் இம்மருத்துவத்தின் மூலம் இறைவனின் கிறுபையால் சுகப்படுத்த முடியும். இது எந்த ஒரு பக்கவிளைவுகள் இல்லாத ஒரு இயற்க்கை மருத்துவம். ஆகவே அனைவர்களும் இந்த மருத்துவத்தை பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன். வல்ல ரஹ்மான் நம் அனைவர்களுக்கும் ஆரோக்கியமான நல் வாழ்வை தந்தருவனாக ஆமீன்.........

வஸ்ஸலாம்.

ஜெய்னுலாப்தீன்
ரஹீமா - தம்மாம்
சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: Salai Sheikh Saleem (Dubai) on 03 February 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25331

அஸ்ஸலாமு அலைக்கும்

என் அன்பு இளவல் சாளை பஷீர் அவர்களின் கட்டுரையை படிக்கும் போது அவர்கள் நேரில் பட்ட வேதனைகளை உணரமுடிந்தது. இதுதான் இந்தியாவின் ஏன் அகில உலகத்தில் உள்ள பெரும்பான்மை மருத்துவமனைகளின் எதார்த்தமான நிலைமை.

புனிதமான மருத்துவத்துறை வியாபாரமாகி விட்ட பிறகு அங்கிருந்து எப்படி மனிதாபிமானத்தை எதிர் பார்க்கலாம்? இவை எல்லாம் நாம் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். என்ன செய்ய ?

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம்மவருக்காவது வர வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட KMT மருத்துவமணை, இத்தனை வருடங்கள் ஆகியும் ஒரு சாதாரண மருத்துவ மையம் போல் தான் தன்னுடைய தரத்தை வைத்துக்கொண்டிருக்கிறது எனபது நம் அனைவருக்கும் வேதனை அளிக்கும் விஷயம்.

அல்லாஹ் தான் எல்லாவற்றிக்கும் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வேதனையின் விசும்பல்கள்....!
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 03 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25336

ஒரு வேதனையான பதிவு! வலி மிகுந்த நிகழ்வுகளின் பிரதிபலிப்பையும், ஆதங்கத்தையும் வார்தைக்கு வார்த்தை வரிகளாக வார்த்தெடுக்கப்பட்ட கட்டுரை!

மருத்துவமனைகளில் நடந்தேறும் பகல் கொள்ளைகளை தன் சொந்த அனுபவம் மூலம் படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார் ஆசிரியர். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகள் இன்று கடைச்சரக்காக மாறி விலை போகும் கொடுமை! சேவை என்பதற்கு பொருள் தேடி அலையும் அவலம்! கேவலம் பணத்தால் தான் மனித உயிரை ஆக்கவும், காக்கவும் முடியும் எனும் விபரீத நிலைக்கு தள்ளப்பட்ட சமூகம்! இதில் பிழைப்பு நடத்தும் மருத்துவ கசாயிகளிடம் இருந்து நாம் பிழைத்து வருவது என்பது சிரமமான ஒன்றே!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: salai s nawas (singapore) on 04 February 2013
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25341

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் மருத்துவமனை சென்றுவருவதை பார்த்து இருக்கிறேன், ஆனால் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதை அவர் எழுத்து மூலம் அறியமுடிகிறது. விவரமறிந்த இவருக்கே இந்த கதி என்றால் மற்றவர்களுக்கு, நினைத்தால் மயக்கம் வருகிறது. இறைவன் மர்ஹூமா அவர்களுக்கு மேலான சுவனபதியை அளிப்பானாக!!!!

இனி யாவருக்கும் இறுதி பயணம் இனிய பயணமாக இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by: S.M. ஹஸன் மௌலானா (குவைத்) on 05 February 2013
IP: 83.*.*.* Kuwait | Comment Reference Number: 25396

பொதுமக்களின் நலன் கருதி, அந்த மருத்துவமனையின் பெயரைக்குறிப்பிட முடியுமா.

Moderator: இதுகுறித்து அறிய, எழுத்தாளரை +91 99628 41761 என்ற எண்ணில் தொடர்புகொள்ள கருத்தாளர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by: Vilack SMA (Kayalpatnam) on 09 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25453

மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு . இந்த நேரத்தில்தான் நமக்கு KMT நினைவுக்கு வருகிறது . நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்களே , அதுபோலத்தான் இதுவும் .

SSS காக்கா சொன்னதுபோல் KMT மருத்துவமனை , இத்தனை வருடங்களாகியும் தன்னுடைய தரத்தை சாதாரண மருத்துவ மையம் போல்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் . காரணம் என்ன என்பதை அவரும் அறிந்திருப்பார் . மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையும் காரணம் . குறைந்தபட்சம் , மகப்பேறு மருத்துவத்திற்குகூட நம்மவர்கள் வெளியூரை நாடாமல் இங்கு வந்தாலே போதும் . KMT லாபகரமாக இயங்கும் , இதை வைத்து அதிகப்படியான சிறப்பு மருத்துவர்களை நியமிக்கலாம் .

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...மருத்துவர் எனும் மலக்கல் மௌத்
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 11 February 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25464

கட்டுரையை படித்தபோது அடிவயிற்றில் அமிலம் சுரந்தது, கண்கள் கண்ணீரை சுரந்தன. எல்லா உயிர்களும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும் என்ற இறை வசனத்தை ஞாபகபடுத்தி "வ இதா அசாபத் ஹும் முசீபதுன், காலூ இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், உலாயிக்க அலைஹிம் சலவாத்தும் மின் ரப்பிஹிம் வரஹ்மா.".என்ற இறைவனின் ஆறுதல் மொழியையும் வாக்குறுதியையும் முழுமையாக நம்பி அல்லாஹ்விடம் தொழுது து ஆ கேளுங்கள். மர்ஹூமா அவர்களுக்கு அல்லாஹ் மேலான சொர்க்க பதவியை கொடுப்பானாக.

இந்தமாதிரி மருத்துவமனைகள் நம் நாட்டில் நிறையவே உள்ளன, மருத்துவ படிப்பே பெரும் சுமையாக போய்விட்டது. அவ்வளவு செலவு செய்து படித்து வருபவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் மருத்துவத்தை சேவை மனப் பான்மையுடன் கடமை உணர்வுடன் செய்கிறார்கள். மற்றப்படி எல்லாமே பணம்தான். கிறிஸ்தவ மருத்துவமனைகள் ஓரளவு பரவா இல்லை என்று சொல்லலாம். இது நான் கண்ட நிதர்சன உண்மை.

கல்லூரிகளில் கூட கிறிஸ்தவ கல்லூரிகளில் கட்டுப்பாடு ஒழுக்கம் இருப்பதை நாம் காண முடியும். நீங்கள் குறிப்பிடும் மெத்தனம், நோயாளிகளிடம் பரிவு காட்டாமல் எரிந்து விழும் தன்மை எல்லா இடத்திலும் இருக்கிறது. தாய்மை உள்ளம் கொண்டவர்கள் என்பதால்தான் பெண்களை செவிலியர்களாக நியமிக்கிறார்கள். அந்த இயற்கையான சுபாவமும் அவர்களிடமிருந்து காணாமல் போனதற்கு என்ன காரணம். ஒன்றும் புரியவில்லை.

என்னதான் உலகம், மருத்துவம் முன்னேறி இருந்தாலும், மனித நேயம் கனிவு, பாசம் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டும் நல்லுணர்வு எல்லாம் நம் மக்களிடமிருந்து விடை பெற்று பணம் பணம் என்று ஆலாய் பறக்கும் பாழாய் போன உலகமாக இது மாறிவிட்டதற்கு முக்கிய காரணம் இறை நம்பிக்கை இறை அச்சம் நபிகள் நாயகத்தின் நற்பண்புகள் குழந்தை பருவத்திலேயே நம் மக்களின் பிஞ்சு உள்ளங்களில் உட்செலுத்தி வளர்கப்படாததுதான் என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும். இதில் அலோபதி என்ன வேறு சிகிச்சை முறைகள் என்ன. நீங்கள் சொன்னமாதிரி மருத்துவர்களே மல்லக்கல் மௌத்துகளாக நம்மை சுற்றி வலம் வருகிறார்கள்.

அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்து விட்டது என்று நம்மை நாமே சாமாதானப் படுத்திக்கொண்டு விழி நீர் துடைத்துக் கொண்டு ஆக வேண்டியதை கவனிப்போம். உங்கள் துயரங்களில் நானும் பங்கு கொள்கிறேன். சாகா வரம் பெற்றவர்கள் யாரும் இல்லை. இன்னக மையிதுன் வ இன்னஹும் மையிதூன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நவீன கொள்ளைக்கார கும்பல் !!
posted by: Salai. Mohamed Mohideen (Dallas) on 16 February 2013
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25539

பொதுவாக மற்றவர்களுக்கு நடந்த / ஏற்பட்ட வலியை கட்டுரையாக வடிக்கும் போதே அதன் தாக்கம் எழுதுபவரிடத்தில் இருக்கும். ஆனால் தன் சொந்த அனுபவத்தை வலியை இக்கட்டுரையில் வடித்து முடிக்கும் வரை, ஆசிரியர் எந்தளவுக்கு மன வேதனை அடைந்திருப்பார் என்பதனை உணர முடிகின்றது.

வாழ்நாள் முழுதும் ஒருவன் சம்பாதித்த சொத்தை ஒரே நிமிடத்தில் ஆட்டையை போட்டு அவனை அட்ரஸ் இல்லாவதானாக பிச்சைக்காரனாய் நடுத்தெருவுக்கு இட்டு செல்லும் மகிமையை தான் இன்றைய பல மருத்துவர்கள்... மருத்துவ மனைகள் (நோயாளிகளின் வீட்டு மனையை வித்த காசு இவர்களின் மருத்துவ மனையாகி விட்டது?) செய்து கொண்டிருக்கிறார்கள். சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி பல லட்சங்களை கொட்டி கொடுத்தும், இவர்கள் தரும் மருத்துவத்தில், நோயாளிகளை நடத்தும் விதத்தில் ஒரு ஆத்மார்த்த திருப்தி இல்லையென்றால் அதை விட மிகப்பெரிய கொடுமை எதுவுமே இல்லை. இவர்கள் மீது "நுகர்வோர் குறை தீர்க்கும் மையத்தில்" வழக்குத் தொடுத்து, உண்மையான மருத்துவ பரிசோதனை & செலவு பற்றி நிரூபிக்க உத்தரவிட படவேண்டும்.

" நோயாளிகள் (அவர்களின் உறவினர்கள்) தங்களின் உரிமைகளை பற்றிய & மருத்துவம் சம்பந்தமான போதிய அறிவும் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியம். அதற்காக முயற்சிகள் விழிப்புணர்வுகள் நமதூரில் நடத்த பட வேண்டும்" இல்லையென்றால் இந்த நவீன கொள்ளைக்கார கும்பலிடமிருந்து எவரும் தப்ப முடியாது. இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்... " என்னால் முடிஞ்சதை மருத்துவம்ங்க பெயரில் கொள்ளையடித்து விட்டேன் இதுக்கு மேல அந்த கடவுள் தான் நோயாளியையும் அவங்க குடும்பத்தையும் காப்பத்தனும் !"

கன்சல்டிங் பீஸ், மாத்திரையில் கமிஷன், லேப், ஸ்கேன்சென்டரில் கமிஷன் என ஒவ்வொரு இடத்திலும் நாம் ஏமாற்றப்படுகிறோம். மருந்து கம்பெனிகள் ('மெடிக்கல் ரெப்' மூலம்) தரும் அன்பளிப்பு / கமிசனுக்கு ஆசைப்பட்டு விலை உயர்ந்த மருந்துகளை எழுதுகின்றனர். எவனுக்குமே புரியாததொரு கிறுக்கல் எழுத்து (மருந்து சீட்டு). நோயாளிக்கு புரியும் வகையில் நோயை தெரிவி / விவரிப்பதுமில்லை.

அரசு மருத்துவமனைகள் சுத்தமில்லாமல் இருப்பதும், ஒருவித அறுவெருக்கத்தக்க வாசனையோடும் இருப்பதும் தனியார் மருத்துவமனைகளுக்கு வசதியாகி போய்விட்டது. போதாக்குறைக்கு கலைஞர் காப்பிட்டு திட்டம்.... அரசாங்க மருத்துவமனைகளை ஒரேயடியாக தண்ணி ஊத்தி தனியார் மருத்துவமனைகளை ஊட்டி வளர்ப்பதற்காக அறிமுகபடுத்த பட்ட திட்டம்.

நடுத்தரபட்ட ஏதோ விபரமரிந்த மக்களுக்கே இந்த கொடுமையான மன வருத்தம், அவலம் என்றால்... கண்ணை காட்டி காட்டில் விட்டது போல இருக்கும் ஏழை எளியவர்களின் நிலை அந்தோ பரிதாபம் ! வாழ்நாள் முழுவதும் பிணியுடன் குடும்பம் நடத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ள பட்டிருகின்றார்கள். இவர்கள் படும் கஷ்டத்தை... சந்திக்கும் அவலங்களை ஓரிரு வரிக்குள் எழுதி முடித்து விடமுடியாது !

மைக்ரோ காயல் அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு, மருத்துவ (பொருளாதார) உதவியோடு மருத்துவ செலவை குறைப்பதற்காக, விலைக்குறைந்த தரமான மருத்துவத்தை பெறுவதற்கான ஆலோசனைகள் இயன்றளவுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

பஷீர் காக்கா போன்ற நம் சகோதரர்களின் முழுமையான ஒத்துழைப்பு /கருத்து /அனுப / தகவல்கள் பரிமாற்றங்கள் கிடைத்தால், எங்கள் சேவைகளை இன்னும் அதிகமாக்கி அத்துடன் (மாற்று) மருத்துவ முறைகளை பற்றிய தகவல்கள் சேகரிப்பு (Database), விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு www.microkayal.com / info@microkayal.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Mohideen (Jeddah) on 27 February 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25816

நமது ஊரில் உள்ள மருத்துவ மனையில் நல்ல treatment இருந்தால் நாம் ஏன் பிற மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். ஒரு சிறந்த மருத்துவர் கூட கிடையாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved