Re:... posted byVilack SMA (Kayalpatnam)[13 February 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 25490
தலைவி , தங்கை ஆபிதாவுக்கு ஒரு வேண்டுகோள் :
----------------------------------------------------
நமது ஊரை நூறு சதவீதம் சுத்தமான நகராக மாற்ற வேண்டும் என்ற உங்களின் எண்ணத்திற்கு , பாராட்டுக்கள் . இதில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால் , ஒருசில கண்டிப்பான உத்தரவுகள் , முக தாட்சண்யம் பாராத நடவடிக்கைகள் எடுத்தே ஆகவேண்டும் .
இல்லையேல் , நீங்கள் அதிக செலவுசெய்து வாங்கியுள்ள இந்த லாரிகள் , சாதனங்கள் வீணாகிப்போகும் . உங்களால் இந்த திட்டத்தில் வெற்றி பெறவே முடியாது .
அதாவது , தெருவில் குப்பை அள்ளும் லாரிகள் வரும் சமயம் , பணியாளர்களிடம் நேரிடையாக கொடுக்கப்படும் குப்பைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் . அவர்கள் வந்தபின்போ , அல்லது அதற்கு முன்போ தெருவில் வைக்கப்படும் குப்பைகள் நிச்சயமாக எடுக்கப்படமாட்டாது . அவ்வாறு தெருவில் குப்பை வைப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் , மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்யுங்கள் . அதன்படி செய்து காட்டுங்கள் .
இன்று பெரும்பாலானவர்கள் , லாரி வந்த பின்பு , தெருவில் குப்பையை கொட்டிவிட்டு செல்கின்றனர். ஒருநாள் பூராவும் அந்த குப்பை தெருவில் கிடந்து , ஆடு மாடு நாய் போன்றவைகள் அதை கிளறி விசிறி அடித்து , தெருவெல்லாம் சிதறி , அடுத்த நாள் லாரி வந்து , தெருவில் சிதறி கிடப்பதை அவர்கள் முறையாக அள்ளாமல் செல்கின்றனர். இதில் அவர்களை குறை சொல்வதில் பயனில்லை . தவறு மக்களிடமே உள்ளது .
வார்டு உறுப்பினர்கள் கவனத்திற்கு :
--------------------------------------------------------
நீங்கள் இதற்காக ஒரு வண்டி ஏற்பாடு செய்து , ஒரு பணியாளரை நியமித்து , ஒவ்வொரு வீட்டிலும் நேரிடையாக சென்று , குப்பைகள் சேகரித்து , நகராட்சி சொல்லும் இடத்தில் அதை கொட்டலாம் . இந்த வேலைக்காக ஒவ்வொரு வீட்டிலும் மாதம் ஏதாவது கட்டணம் வசூலிக்கலாம் . முயற்சி செய்து பாருங்களேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross