தமிழக அரசின் IUDM திட்டத்தின் கீழ் (2011-12) காயல்பட்டின நகராட்சியில் - 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த டெண்டர் மார்ச் 2012 இறுதியில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட அந்த டெண்டர் அறிவிப்பில் பல விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதனால் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட டெண்டர், இறுதியாக மே 23, 2012 அன்று நடந்தது.
இத்திட்டம் மூலமாக கீழ்க்காணும் பொருட்கள் கொள்முதல் செய்ய - நகர்மன்றம் மூலம் - முன்னரே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
1. டம்பர் பிளேசர் தொட்டி 45 எண்ணம் வாங்குதல் - ரூ.24,75,000 (ஓர் எண்ணம் – ரூ 55,000)
2. புஷ்காட் 48 எண்ணம் வாங்குதல் - ரூ.7,08,000 (ஓர் எண்ணம் – ரூ 14,750)
3. டம்பர் பிளேசர் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.8,50,000
4. டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த இகாமட் வாகனம் 1 எண்ணம் வாங்குதல் - ரூ.9,67,000
மொத்தம் ரூ.50,00,000
டம்பர் பிளேசர் வாகனம் பொருத்த இகாமட் வாகனம் (Chassis) தவிர அனைத்து பொருட்களுக்கும் டெண்டர் விடப்பட்டது. இறுதியாக பெறப்பட்ட ஒப்பந்தபுள்ளிகள் - மதிப்பீட்டை விட 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக அமைந்தன.
இடையில் மூன்று மாதங்கள் நகர்மன்றக் கூட்டங்கள் நடைபெறாததால் - ஒப்பந்தபுள்ளிகளுக்கு, அக்டோபர் மாதம் நடந்த சாதாரண கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நகராட்சி பொறியாளரால் ரூபாய் 8,50,000 என மதிப்பிடப்பட்ட Vehicle Body Building, மகாவிஷ்ணு லேசர் இண்டஸ்ட்ரீஸ், கோயம்பத்தூர் நிறுவனத்தால் 499,000 ரூபாய்க்கு டெண்டர் எடுக்கப்பட்டது.
9,67,000 ரூபாய் என மதிப்பிடப்பட்ட டம்பர் பிளேசர் பொருத்த இகாமட் வாகனம் 9,16,000 ரூபாய்க்கு அரசு Directorate General of Supplies & Disposals (DGS&D) கட்டணத்தில் வாங்கப்பட்டுள்ளது.
தற்போது முழுவதுமாக பொருத்தப்பட்ட இந்த வாகனம் நகராட்சி வந்தடைந்துள்ளது.
|