தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்பார்ந்த தக்வா உறுப்பினர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
இறையருளால் நம் மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் - 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில், பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
நம் மன்றம் இதுவரை ஆற்றியுள்ள நகர்நலப் பணிகள் குறித்தும், வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, இதனையே அழைப்பாக ஏற்று, நல்ல பல ஆலோசனைகளை வழங்குமுகமாக, நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ், நமது வணிகத்தில் அபிவிருத்தியை அளித்து, நம்மை நம் குடும்பத்தாருக்கும், சமுதாயத்திற்கும், நமதூருக்கும், நாட்டிற்கும் பயனுள்ளவர்களாகவும், ஈருலக நற்பேறுகளை நிறைவாகப் பெற்றவர்களாகவும் ஆக்கியருள்வானாக, ஆமீன்.
இச்செய்தியைப் பார்ப்பவர்கள், தமக்கறிமுகமான - நம் மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவசியம் இத்தகவலைத் தெரிவித்து, அவர்களையும் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்
செயலர்
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) |