காயல்பட்டினம் நகராட்சியின் பொது நிதியில் இருந்து 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிப்ரவரி 6 ஆம் தேதி - தினமணி நாளிதழின் நெல்லை பதிப்பில் வெளியான விளம்பரப்படி பணிகள் விபரம்
(1) நகராட்சி பகுதிகளில் பழுதடைந்த வால்வு தொட்டிகளை மேம்பாடு செய்தல் மற்றும் கட்டுதல்
மதிப்பீட்டு தொகை: 8.5 லட்சம் ரூபாய்
ஒப்பந்தகாரர் வகுப்பு: 4 க்கு மேல்
பணி முடிவடையும் நாள்: 1 மாதம்
(2) நகராட்சி பகுதிகளில் தேவையான இடங்களில் வேகத்தடை அமைத்தல்
மதிப்பீட்டு தொகை: 60,000 ரூபாய்
ஒப்பந்தகாரர் வகுப்பு: 5 க்கு மேல்
பணி முடிவடையும் நாள்: 1 மாதம்
(3) நகராட்சிக்கு சொந்தமான நவீன ஆடு அறுக்கும் கூடத்தில் மாடு வெட்டுவதற்கு தனியாக ஷெட் அமைத்தல்
மதிப்பீட்டு தொகை: 2 லட்சம் ரூபாய்
ஒப்பந்தகாரர் வகுப்பு: 5 க்கு மேல்
பணி முடிவடையும் நாள்: 2 மாதம்
(4) விசாலாட்சியம்மன் கோயில் தெரு முதல் இரத்தினபுரி வரை (வழி பப்பரப்பள்ளி) உள்ள தார்சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல்
மதிப்பீட்டு தொகை: 22 லட்சம் ரூபாய்
ஒப்பந்தகாரர் வகுப்பு: 3 க்கு மேல்
பணி முடிவடையும் நாள்: 6 மாதம்
பிப்ரவரி 25, 2013 வரை ஒப்பந்த புள்ளி அட்டவணை வழங்கப்படும். பிப்ரவரி 26, 2013 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.
விசாலாட்சியம்மன் கோயில் தெரு முதல் இரத்தினபுரி வரை (வழி பப்பரப்பள்ளி) உள்ள தார்சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் பணி - தற்போது , காயல்பட்டினம் துளிர் பள்ளிக்கு தென்கிழக்கில் அமைக்கப்பட்ட வரும் துணை மின் நிலையம் பகுதியை ஒட்டிய சாலையாகும்.
பிப்ரவரி 8 ஆம் தேதி - THE NEW INDIAN EXPRESS நாளிதழின் தமிழக பதிப்பில் வெளியான விளம்பரப்படி பணிவிபரம்
(1) நகராட்சிப்பகுதி ஒரு வழிச் சாலையான பெரிய நெசவு தெரு சாலை தாயிம்பள்ளி முதல் ஐ.ஒ.பி. வங்கி வரை மற்றும் எல்.கே. லெப்பை தம்பி சாலை மேம்பாடு செய்தல்
மதிப்பீட்டு தொகை: 28.5 லட்சம் ரூபாய்
ஒப்பந்தகாரர் வகுப்பு: 4 க்கு மேல்
பணி முடிவடையும் நாள்: 3 மாதம்
இந்தப்பணி குறித்த கால அட்டவணை வெளியிடப்படவில்லை.
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி இதுவரை இணையதளங்களில் - ஒப்பந்தப்புள்ளி விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross