நூலகம் சென்று புத்தகங்கள் மற்றும் நாளிதழ், வார - மாத இதழ்களைப் படித்து, அவற்றிலுள்ள சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒருவருக்கொருவர் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்குடன் துவக்கப்பட்டது காயல்பட்டினம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாமன்றம் அமைப்பு.
இவ்வமைப்பின் சார்பில், பொதுத் தகவல் கலந்துரையாடல் மாதாந்திர இரண்டாவது கூட்டம், மரைக்கார் பள்ளி அருகிலுள்ள ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இலக்கிய ஆர்வலர் மவ்லவீ சுல்தான் ஸலாஹுத்தீன் மழாஹிரீ மற்றும் இலக்கிய ஆர்வலர்களான மவ்லவீ அப்துர்ரஹ்மான் ஷிப்லீ மிஸ்பாஹீ, கத்தீபு ஏ.ஆர்.எம்.எம்.மாமுனா லெப்பை, டி.எம்.எஸ்.சுல்தான், கவிஞர் ஷேக், எழுத்தாளர் ஏ.எல்.எஸ்.இப்னு அப்பாஸ், வழக்கறிஞர் அமலன், மாமன்றத்தின் கவுரவ ஆலோசகர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக், வி.எம்.பால முருகன், கல்லூரி மாணவர் வி.எம்.மீரான், காயல்பட்டினம் அரசு நூலகர் முஜீப், மாணவர் அப்துல் காதிர் நவ்ஃபல், எம்.என்.முஹம்மத் இப்றாஹீம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
வி.எம்.மீரான் |