DCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய (October 2012 - December 2012) காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில் DCW வரவு 363 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகளுக்கு முந்தைய லாபம் 53 கோடியே 50 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரி மற்றும் இதர ஒதுக்கீடுகளுக்கு பிந்தைய லாபம் 28 கோடியே 14 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (October 2011 – December 2011) வரவு 312 கோடி ரூபாய், லாபம் 14 கோடியே 20 லட்சம் ரூபாய்.
செப்டம்பர் 2012 முடிய (July 2012 - September 2012) காலாண்டில் இந்நிறுவனத்தின் வரவு 334 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர செலவுகளுக்கு பிந்தைய லாபாம் 35.89 கோடி ரூபாய் என்றும் இருந்தது.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 44 கோடி ரூபாய் (இலாபம் - 6 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 185 கோடி ரூபாய் (இலாபம் - 51 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 121 கோடி ரூபாய் (நஷ்டம் - 3 கோடி ரூபாய்).
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross