| 
 ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) அமைப்பின் சார்பில், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், தகவல் பலகை மற்றும் பராமரிப்புப் பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 
  
இரயில் போக்குவரத்து கால அட்டவணை அடங்கிய தகவல் பலகை, தொடர்வண்டி நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 
  
 
  
 
  
 
  
அத்துடன், காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய வளாகத்தில், தரை பரப்பிலும், படிக்கட்டிலும் இருந்த உடைப்புகள் சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. 
  
 
  
தொடர்வண்டி நிலைய பயன்பாட்டிற்காக எமெர்ஜென்ஸி விளக்குகள் இரண்டும் மன்றத்தின் சார்பில் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மன்றச் செயலாளர் ஹாஃபிழ் எம்.ஏ.செய்யித் முஹம்மத், தொடர்வண்டி நிலைய மேலாளரிடம் (பொறுப்பு) அவற்றை வழங்கினார். 
  
 
  
தகவல் & படங்கள்:  
ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் (ஜக்வா) சார்பாக 
கஸ்வா ஜெம்ஸ் காதர் 
மற்றும் 
செய்யித் அபூதாஹிர்  |