காயல்பட்டினம் நகராட்சி மன்றம் அமைந்துள்ள பஞ்சாயத் வீதியில், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு இறைவழிபாட்டுத்தலம் - மஸ்ஜித் அவசியம் என அப்பகுதி மக்கள் கருதினர்.
அதனடிப்படையில், தோல்சாப் குடும்பத்தைச் சேர்ந்த - காலஞ்சென்ற ஷேக் அப்துல் காதிர் ஜீலானீ என்பவர் - அப்பகுதியில் பள்ளிவாசல் கட்டுவதற்காக, தனக்குச் சொந்தமான 7600 சதுர அடி நிலத்தை நன்கொடையாக அளித்து வக்ஃப் செய்திருந்தார்.
அவ்விடத்தில், சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில், ‘மஸ்ஜித் ஜீலானீ’ என்ற பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 25.01.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
பொதுமக்களின் நன்கொடையை எதிர்பார்த்தே இப்பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளைத் துவக்கியுள்ளதாகவும், தாராள நன்கொடைகளை வாரி வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மஸ்ஜித் ஜீலானீ பள்ளி கட்டுமானப் பணிக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:-
அன்பார்ந்த, பொதுமக்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நமதூர் காயல்பட்டினம் பஞ்சாயத்து ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் நாங்கள், ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகைக்காகவும், நோன்பு காலங்களில் சிறப்பு வழிபாடுகளுக்காகவும் சற்று தொலைவிலுள்ள பள்ளிவாசல்களுக்கே சென்று வருகிறோம். இப்பகுதியில் வசிக்கும் முதியோர் உட்பட பலருக்கும் இது மிகுந்த சிரமமாக உள்ளது.
அதுபோல, நமதூர் நகராட்சி மன்ற அலுவலகத்திற்கு பல்வேறு அலுவல்கள் நிமிர்த்தம் வந்து செல்வோருக்கும் - அருகில் பள்ளிவாசல் இல்லாத காரணத்தால், ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லாத நிலையுள்ளது.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, இங்கு ஒரு பள்ளிவாசல் அமைவது அவசியம் என இப்பகுதி மக்களாகிய நாங்கள் கருதினோம்.
அதனடிப்படையில், கருணையுள்ள அல்லாஹ்வின் அளப்பெருங்கிருபையால், கடந்த 25.01.2013 வெள்ளிக்கிழமையன்று பள்ளி கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
7600 சதுர அடி பரப்பில், சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இப்பள்ளியின் கட்டுமானப் பணிகளுக்கு, எங்களால் இயன்ற பங்களிப்பை எங்கள் சொந்தப் பொறுப்பில் செய்து வருகிறோம். முழு செலவினங்களையும் எதிர்கொள்ள பொதுமக்களாகிய உங்களின் தாராள ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
“அல்லாஹ்வுக்காக பூமியில் ஒரு பள்ளிவாசலைக் கட்டுவோருக்கு சுவனத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புவான்” என்ற கருத்திலான - நம் உயிரினுமினிய கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருள்மொழிக்கேற்ப, இப்புனிதமான பணிக்கு, தங்களாலியன்ற பொருளாதார ஒத்துழைப்புகளை நிறைவாகச் செய்ய முன்வருமாறு தங்கள் யாவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.
கிருபையாளன் அல்லாஹ், உளத்தூய்மையுடன் நாங்கள் பொறுப்பேற்று செய்து வரும் இப்புனிதப் பணியை ஏற்றுக்கொண்டு, இதற்காக உழைக்கும், உதவும் அனைவரின் ஹலாலான நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி வைத்து, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
மஸ்ஜித் ஜீலானீ பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு தங்கள் பங்களிப்பை வழங்க விரும்புவோர்,
INDIAN OVERSEAS BANK
BRANCH:KAYALPATTINAM (0491)
A/C NAME : MASJID JEELANI
A/C NO : 049102000000142
IFSC CODE : IOBA 0000491
என்ற விபரப்படியான வங்கிக் கணக்கிற்கு தங்கள் மேலான ஒத்துழைப்பை வாரி வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, masjidjeelani@gmail.com என்ற - பள்ளியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியையோ அல்லது,
(1) துணைத்தலைவர் ஜனாப் எம்.ஏ.புகாரீ
(கைபேசி எண்: +91 95978 44550)
(2) துணைப் பொருளாளர் ஜனாப் எம்.எம்.ஜெய்னுத்தீன்
(கைபேசி எண்: +91 98429 54420)
ஆகியோரில் ஒருவரையோ தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு, மஸ்ஜித் ஜீலானீ பள்ளி கட்டுமானப் பணிக்குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
கஸ்வா ஜெம்ஸ் காதர் |