காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையுடன் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றம் சார்பில், இம்மாதம் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று (நேற்று) பல் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில், பல் மருத்துவப் பிரிவில் - தேவைப்பட்டோருக்கு எக்ஸ்ரே பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும், பல் மருத்துவ நிபுணருமான டாக்டர் ஹமீத் யாஸிர், கே.எம்.டி. மருத்துவமனையின் பல் மருத்துவ நிபுணர் டாக்டர் அர்ச்சனா ஆகியோர் இம்முகாமில் பங்கேற்று, மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இம்முகாமில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பயன்பெற்றனர்.
முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும், இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் பரிசோதனை, உடல் எடைக்கூறு (BMI) பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை, அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் தலைமையில், அம்மன்றத்தைச் சேர்ந்த - எம்.ஏ.கனீ முஹம்மத், எம்.ஜெ.ஹபீபுர்ரஹ்மான், ‘தாருத்திப்யான் நெட்வர்க்’ நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் செய்திருந்தனர்.
எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான், பி.எம்.ஏ.அப்துல் ஹமீத், ஆர்.சுலைமான் ஃபயாஸ், ஏ.ஓ.அதாஉர் ரஹ்மான், ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ, எஸ்.எஸ்.ஜெய்னுல் ஆப்தீன் இம்ரான், விளக்கு எம்.ஏ.முஹம்மத் சுலைமான் ஆகிய மாணவர்கள் தன்னார்வலர்களாக (Volunteers) துணைப்பணியாற்றினர்.
[படங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது @ 22:34 / 11.02.2013] |