ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் மாதாந்திர - 11ஆவது செயற்குழுக் கூட்டம் 08.02.2013 வெள்ளிக்கிழமை மாலையில், மன்றத்தின் துணைத்தலைவர் பொறியாளர் மக்பூல் இல்லத்தில், செயற்குழு உறுப்பினர் பொறியாளர் முஹம்மத் ஸாலிஹ் தலைமையில் நடைபெற்றது.

மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ இறைமறை வசனங்களையோதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
இம்மாதம் 10ஆம் தேதியன்று, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையுடன் இணைந்து, அம்மருத்துவமனையில் அபூதபீ காயல் நல மன்றம் சார்பாக நடத்தப்படும் பல் மருத்துவ முகாம் இறுதிகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன்,
முகாமில் பங்கேற்று மருத்துவ சிகிச்சை செய்யவுள்ள - விடுமுறையில் தாயகம் சென்றிருக்கும் - மன்றத்தின் செயற்குழு உறுப்பினரும், பல் மருத்துவ நிபுணருமான டாக்டர் ஹமீத் யாஸிர், முகாம் ஒருங்கிணைப்பாளரான - பொறியாளர் பி.எம்.ஹுஸைன் நூருத்தீன் ஆகியோருடன் தொலைபேசி வழியே உரையாடி, தகவல்கள் பெறப்பட்டது.
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்டத்தை, வரும் மார்ச் மாதம் 08ஆம் தேதி நடத்துவதென்றும், அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதென்றும், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் நாள், இடம் உள்ளிட்டவை குறித்து அடுத்த செயற்குழுவில் தீர்மானிக்கப்படும் என மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அறிவித்தார்.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தகவல்:
M.E.முஹ்யித்தீன் அப்துல் காதிர்
செய்தித் துறை பொறுப்பாளர்
காயல் நல மன்றம்
அபூதபீ
படங்கள்:
எழுத்தாளர் M.S.அப்துல் ஹமீத்
|