காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், 09.02.2013 சனிக்கிழமையன்று (நேற்று) இரவு 09.00 மணியளவில் டொயோட்டோ க்வாலிஸ் வாகனமொன்று விபத்திற்குள்ளானது.
காயல்பட்டினம் கீழ லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் ஞான குமார் (வயது 22) வாகனத்தை, எல்.எஃப்.வீதி வழியே ஓட்டி வந்துள்ளார்.
பேருந்து நிலைய வளாகத்திற்குள் அவர் வாகனத்தை வலது பக்கமாக அவர் திருப்ப முனைந்தபோது, கட்டுக்கடங்காத வேகம் காரணமாக வாகனம் தறிகெட்டு ஓடி, எதிர்திசையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுற்றுச்சுவருடன் ஒட்டி நிறுவப்பட்டிருந்த பேருந்து கால அட்டவணை பலகையின் மீது மோதி நின்றதாக அந்நேரத்தில் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வாகன விபத்து காரணமாக, அறிவிப்புப் பலகையின் ஒரு பக்க கம்பி சேதமுற்றது. அப்பகுதியில் எப்போதும் பெண்கள் உள்ளிட்ட பயணியர் கூட்டமாக நிற்பது வழமையெனினும், இந்நிகழ்வின்போது யாரும் அவ்விடத்தில் நிற்காதிருந்ததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்ததும், ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான காவல் துறையினர் நிகழ்விடம் விரைந்து வந்து விசாரித்துச் சென்றனர்.
தகவல்:
A.S.புகாரீ |