கர்நாடக மாநிலம், பெங்களூரு காயல் நல மன்றம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து, நான்காமாண்டு துவங்குவதையொட்டி, அம்மன்றத்தின் 7ஆவது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம விழா, இம்மாதம் 17ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் ( I-Wave Systems ) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமான எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பின் பெங்களூரு காயல்நல மன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... இறையருளால் இம்மடல் தங்கள் யாவரையும் பூரண உடல் நலமுடனும், தூய நகர்நல சிந்தனைகளுடனும் சந்திக்கட்டுமாக.
கடந்த 09.12.2012 அன்று நடைபெற்ற நம் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், தீர்மானம் எண் 3இல், எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதியன்று மன்றத்தின் 7ஆவது பொதுக்குழு மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சியை, பெங்களூரு - தேவனஹல்லியிலுள்ள மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி ஃபர்ம் ஹவுஸில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்ட படி, இன்ஷாஅல்லாஹ் அதற்கான ஏற்பாடுகளை மன்றத்தின் மூலம் செய்து வருகிறோம் என்பதை இந்த நல்ல நேரத்தில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: இந்த ஒரு நாள் குடும்ப சங்கம விழாவிற்காக - வாகன வசதி, தின்பண்டங்கள், மதியம் உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்யவும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும் நாடியுள்ளோம்.
கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், உறுப்பினர்கள் அனைவருக்கும் முழு திருப்தியளிக்கும் வகையில் செய்ய ஆவலாய் உள்ளோம். எனவே, (தாங்கள், தங்கள் மனைவி, மக்கள், உறவினர்கள் என) சங்மக நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரது பட்டியலையும், 10.02.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணிக்கு முன்பாக,
சகோ.இஸ்மாயில் அவர்களை 9901 972 212 என்ற எண்ணிலும்,
சகோ.வாவு முஹம்மத் அவர்களை 9901 972 217 என்ற எண்ணிலும்
தினமும் மாலை 06.00 மணிக்குப் பிறகு மட்டுமே தொடர்புகொண்டு, சமர்ப்பிக்குமாறும், இதர நேரங்களில் தொடர்புகொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் தங்கள் யாவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் கொடுக்கும் வருகைப்பதிவின் படியே உணவு ஆர்டர் கொடுக்க இருப்பதால், தாமதிக்காமல் உடனடியாக கூட்டத்தில் கலந்துகொள்வோரின் பட்டியலை மேற்கண்ட பொறுப்பாளர்களிடம் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் குறித்த மேலதிக விபரங்களுக்கும், மேற்படி பொறுப்பாளர்களிடமே தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்ற தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
K.K.S.செய்கு முஹம்மது சாலிஹ்,
துணைத் தலைவர்,
காயல் நல மன்றம்,
பெங்களூரு, கர்நாடக மாநிலம்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 14:50 / 11.02.2013] |