இந்தியாவின் 64ஆவது குடியரசு தின விழாவையொட்டி, தமிழகம் தழுவிய அளவில் - 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சீனியர் பிரிவு கால்பந்தட்டப் போட்டிகள் தஞ்சாவூரில் நடைபெற்றது.
26.01.2013 மாலை 04.30 மணியளவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், திண்டுக்கல் புனித மேரி மேனிலைப்பள்ளியை எதிர்த்தாடிய காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மாநில அளவில் கால்பந்தாட்டப் போட்டியில் முதலிடம் வென்று சரித்திர சாதனை புரிந்தமைக்காக, தம் பள்ளியின் சீனியர் பிரிவு கால்பந்து அணி வீரர்களுக்கு, பாராட்டு விழா 28.01.2013 அன்று காலை 09.15 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ளி) நடைபெற்றது.
இந்நிகழ்வில், தம் பள்ளி மாணவர்களின் இச்சாதனையைப் பாராட்டி, விரைவில் சிறப்பு நிகழ்ச்சியொன்றை நடத்தி சிறப்பு செய்யப்படுமென நிர்வாகிகள் தெரிவித்ததாக, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தெரிவித்தார்.
அதனடிப்படையில், கால்பந்துப் போட்டியில் மாநிலத்தில முதலிடம் வென்ற பள்ளி மாணவர்களைப் பாராட்டி, இன்று மாலை 04.30 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. சாதனை மாணவர்களுக்கு இவ்விழாவில் பரிசுகள் பல வழங்கப்படவுள்ளன.
ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, உடற்கல்வி ஆசிரியர்களான வேலாயுதம், ஜமால் உள்ளிட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
தகவல்:
துணி M.O.அன்ஸாரீ
(முன்னாள் மாணவர்) |